மரணத் திருவிழா, சவப் பெட்டித் தியானம் – ஃபாரீனர்ஸ்களிடையே பரவும் புது மோகம்
தமிழ்நாட்டில் நோய் நொடிகளில் இருந்து பிழைக்க கடவுளுக்கு பாடக்காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்ளும் வழக் கம் உள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலம் என போற்றப்படும் கிராம வழிப்பாட்டு கோயில் இந்த பாடைக்கட்டி மகா மாரியம்மன் கோயில். உள்ளது இங்கு ஆண்டு தோறும் பாடைக் காவடி பங்குனி திருவிழா நடைப்பெறூவது வழக்கம். பாடைக்காவடி என்பது மறுபிறவி வழங்கியதாக அம்மன் மீது நம்பிக்கையும், பக்தியும் கொண்டு பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக இறந்தவர்களை போல் பாடையில் கொண்டு வந்து அம்மனுக்கு நேர்த்தி செலுத்துவது என்பது வேறெங்கும் இல்லாத சிறப்பு அம்சம் ஆகும்.

இதுக்கிடையிலே லண்டனில் உள்ள சவுத்பேங்க் மையத்தில் ‘மரண திருவிழா’ என்ற பெயரில் நடக்கும் 10 நாள் கண்காட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ரிருக்குது. தில் இடம்பெற்றுள்ள விதவிதமான சவ பெட்டி களை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
அதாவது இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டி வைப்பவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். பிடித்த டிசைனில், பிடித்த கலரில் சவ பெட்டி ஆர்டர் கொடுக்கும் கலாசாரம் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புதிதாக பரவ ஆரம்பித் திருக்கிறது.இந்நிலையில், ‘சாவுதானே.. டேக் இட் ஈஸி’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் லண்டனில் 10 நாள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவுத்பேங்க் மையத்தில் இக்கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது.
இங்கிலாந்து மற்றும் ஆப்ரிக்காவின் கானா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் வடிவமைத்த விதவிதமான சவ பெட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.இதுபற்றி பாரம்பரிய டிசைனில் சவ பெட்டிகள் தயாரித்து வரும் விக் பியர்ன் நிறுவனத்தின் மேனேஜர் டேவிட் கிராம்டன்‘வழக்கமான சவ பெட்டி வேண்டாம். எனக்கு ஏராபிளேன் என்றால் ரொம்ப பிடிக்கும். அதே போல எனக்கு சவ பெட்டி செய்து கொடுங்கள்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண் ஆர்டர் கொடுத்தார். அது முதல் படகு, கார், பட்டம், முட்டை என டிசைன்களில் செய்து கொடுத்திருக்கிறோம். ‘உள்பக்கம் சிவப்பு கலர் பார்டர் கொடுங்கள். படுக்கிற இடத்தில் மெத்மெத்தென்று குஷன்,
வெல்வெட் வையுங்கள்’ என்றுகூட சிலர் ஆர்டர் கொடுக்கிறார்கள். மரணம் சாதாரண சம்பவம்தான் என்ற கருத்தை தெரிவிக்கிற வகையிலும் இது போன்ற வித்தியாச சவ பெட்டிகளை விளம்பரப்படுத்தும் வகையில் கண்காட்சி நடக்கிறது. என்ரு தெரிவித்திருந்தார்
அந்த வகையில் சமீப காலமாக் சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உள்ள பொதுமக்கள் சவப்பெட்டிக்குள் படுத்திப்பது எந்த மாதிரியான அனுபத்தை தருகிறது என தெரிந்து கொள்ளும் பொருட்டு புதுவிதமான நிகழ்ச்சி ஒன்றை சமீப காலமாக மிகவும் பிரபலப்படுத்தி வருகின்றனர்.இந்த நகரத்து மக்களின் இந்த சவப் பெட்டிக் கலாச்சாரம் சீனா முழுவதும் தற்போது பரவி வருவதாக கூறப்படுகிறது.இதற்காக சிறப்பு பூங்காக்களும் சில தனியார் நிறுவனங்கள் தொடங்கபட்டு உள்ளது. மேலும் சவப்பெட்டிக்குள் படுத்திருப்பவர்களுக்கு இறுதிச்சடங்குகளும் நடத்தி வைக்கப் படுகிறது.
குறிப்பாக இளைஞர்கள் இளம் பெண்கள் மத்தியில் இந்த புதிய கலாச்சாரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் சவப்பெட்டிக்குள் படுத்திருக்கும் சில மணித்துளிகள் தியானத்தில் ஈடுபட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பவர்களை ஊக்குவிக்கின்றனர்.
இதேப்போன்று ஷாங்காய் மாநகரில் அமைந்துள்ள சிறப்பு பூங்கா ஒன்றிற்கு சமாதி 4டி என பெயரிட்டு மரணத்தின் நிலைகளை விருந்தினர்களுக்கு வழங்கி வருகின்றனராம். தென் கொரியாவிலும் இந்த வகை கலாச்சாரம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், மூடிய சவப்பெட்டிக்குள் தியானத்தில் ஏற்படுவது தங்களின் துயரங்களை மறக்கடிக்க உதவுவதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


