பார்லிமெண்டுக்கு பைக்கில் வந்த லேடி எம்.பி

பார்லிமெண்டுக்கு பைக்கில் வந்த லேடி எம்.பி

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினரான ரஞ்ஜீத் ரஞ்சன், பாராளுமன்றத்திற்கு பைக்கில் வந்து அசத்தினார். இது, பாராளுமன்ற வளாகத்தில் இது அரிதான நிகழ்வு ஆகும்.
woman mp bike mar 8
42 வயதான ரஞ்ஜீத் ரஞ்சன் காங்கிரஸ் கட்சி சார்பாக பீகார் மாநில சுபால் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.மக்களவையில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்களிலேயே மிகவும் ஆவேசமாக பேசக் கூடியவர், ரஞ்ஜீத் ரஞ்சன். பெண் எம்.பி.யாக இருந்தாலும், பா.ஜ.க.வுக்கு எதிராக, லோக் சபாவில் அனல் தெறிக்க பேசுவார்.இதனாலேயே, காங்கிரஸ் மேலிடத்திடம் பாராட்டு பெற்றவர். இவரது கணவர் பப்பு யாதவும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். ஜன் அதிகார் என்ற கட்சியில் உள்ள பப்பு யாதவ் பீகாரில் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதியாக உள்ளார்.

இன்று பந்தாவாக பைக்கில் நாடாளுமன்ற வளாகம் வந்தவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்ஜீத் ரஞ்சன், “என்னுடைய சொந்த வருமானத்தில் அந்த பைக்கை வாங்கினேன். என்னுடைய கணவரைக் கூட பைக்கை தொட விடமாட்டேன். இதுவரை நான் செய்த அனைத்து விஷயங்களுக்கும் என்னுடைய பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததில்லை” என்று கூறினார்.

Related Posts