மிதக்கும் நவீன கப்பல் துறைமுக மேடை!- சீன கப்பற்படையில் அறிமுகம்
சீனா தனது கப்பற்படையை நவீனப்படுத்தும் முயற்சியாக மிதக்கும் கப்பற்துறைமுக மேடை ஒன்றை முதன் முறை யாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கடற்கரையில் இருந்து அதிக தொலைவில் கடலுக்குள் இருக்கும் சேதம டைந்த போர் கப்பல்களை சீர் செய்திட முடியும் என அந்நாட்டின் மக்கள் விடுதலை ராணுவ செய்தி நிறுவனம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

வெளிப்புற உதவியின்றி சுயசார்புடன் இயங்கும் திறன் கொண்ட இதனை குறித்த தகவலில், ஹுவாசுவான் நகரின் நம்பர் ஒன்னான இந்த துறைமுகம், பழுதடைந்த கப்பல்களை மிக குறைந்த காலத்தில் வேகமுடன் சீர் செய்து போர்திறனுடன் கப்பற்படைக்கு திருப்பி அனுப்பும் பணியை திறம்பட செய்யும்.
அதனுடன் போர் நடைபெறும் இடங்களுக்கு செல்லும் வகையில் இந்த துறைமுகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மிதக்கும் துறைமுகத்தின் உள்ளே போர் கப்பல் ஒன்று இருப்பது போன்ற புகைப் படம் ஒன்றை வெளியிட்டுள்ள செய்தி நிறுவனம், எங்களது கப்பற்படையின் சேதமடைந்த மிக பெரிய கப்பல்களை கடற்கரையில் இருந்து கடலுக்குள் அதிக தொலைவில் கொண்டு செல்லும் திருப்புமுனையான பணியை மேற் கொள்ளும் அடையாளம் ஆக இந்த கப்பல் தொடக்க திட்டம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த கப்பலின் பயன் என்னவெனில், சிறிய அளவில் சேதமுற்ற கப்பல்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டி யதுமில்லை. அதேவேளையில், அதிக சேதமடைந்த கப்பல்களை ஷிப்யார்டிற்கு (கப்பல் கட்டும் தளம்) திருப்பி அனுப்ப வேண்டியதுமில்லை என தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலானது போர் கப்பல்கள், எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கையாளும் திறன் படைத்தது.
அதனுடன் 2 மீட்டர் உயரம் கொண்ட கடல் அலைகளை எதிர்கொள்ளும் திறனும் கொண்டது. ஆனால் விமானந் தாங்கி கப்பல்களை இது சரி செய்வதில்லை. சர்ச்சைக்குரிய தென்சீன கடல், இந்துமகா சமுத்திரம் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய கடல்வழி பகுதிகளில் வளர்ச்சி அடையும் நோக்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தனது உள்நாட்டு ஆயுத தொழிற்சாலையை மேம்படுத்துவதற்காக கோடிக்கணக்கான நிதியை சீனா முதலீடு செய்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் 5 டிரில்லியன் டாலர்கள் மதிப்பில் உலகளவிலான வர்த்தகம் நடைபெறும் தென்சீன கடலின் பெரும் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு போட்டியாக வியட்நாம், மலேசியா, புரூணை, பிலிப்பைன்ஸ் தீவுகள் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இருக்கின்றன. சீனா, மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் விலை குறைந்த தனது தொழில்நுட்பத்தை கொண்டு வெளிநாட்டு சந்தைகளில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் சீனாவின் மொத்த ராணுவ பட்ஜெட் 886.9 பில்லியன் யுவான் (141.45 பில்லியன் டாலர்கள்) ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய வருடத்தை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.


