டெங்கு காய்ச்சலால் பலியான மகன் இறந்த துக்கத்தில் பெற்றோர் மாடியில் இருந்து குதித்து சூசைட்:
டெங்கு காய்ச்சலால் அபெக்ட் ஆன மகனுக்கு டெல்லியில் உள்ள இரண்டு ஹாஸ்பிட்டல்கள் பிராப்பரா ட்ரீட் மெண்ட் கொடுக்காததாலே பையன் இறந்துட்டான். உடனே தங்களுக்கு இருந்த ஒரே மகன் பலியாகி விட்டானே என்ற அப்செட்டில் மகனின் பேரண்ட்ஸ் தங்களோட அப்பார்மெண்ட் மாடியில் இருந்து குதிச்சி சூசைட் பண்ணிக் கிட்டாங்க என்ற செய்தி பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கு.!…

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லக்ஷ்மிசந்திரா, இவரு டெல்லியில் உள்ள பிரைவேட் நிறுவனத்தில் வேலை செஞ்சு வர்றார்.இவருடைய மனைவி பெயர் பபிதா, இவர்களுடைய மகன் அவினாஷ் (வயது7) இவங்க சவுத் டெல்லியில் உள்ள லடோ சராய் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவினாஷ்க்கு கடுமையான டெங்கு காய்ச்சல் இருந்து வந்தது. டெங்குவால் பாதிக்கப்பட்ட மகனை அழைத்து கொண்டு டெல்லியில் உள்ள ரெண்டு பிரபல பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க இரண்டு மருத்துவமனைகளும் மறுத்து விட்டுச்சாம். இதனால் போன 8-ந்தேதி சிறுவன் பரிதாபமாக பலியானான்.
மகன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த லக்ஷ்மிசந்திராவும் அவரது மனைவியும் ஒத்தைப் பையனே போய்ட்டான்..இனி நாம் மட்டும் உயிர் வாழ்வதைவிட இறந்துப்போவதே மேல் என பேசி முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் கைகோர்த்தபடி நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட இடத்தில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் இது நாங்களாக தேர்ந்தெடுத்த முடிவு. எங்கள் முடிவுக்கு யாரும் காரணம் அல்ல என்று எழுதப்பட்டு இருந்தது. கடித்தை கைபற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் இது குறித்து தகவல்கள் வெளியானது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டிருந்த சிறுவன் அவினாஷூக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 2 மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் படி டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உத்தரவிட்டுள்ளாராம்.


