32°C
விளம்பரம்
Advertisement

இந்தியாவில் இளம்பிராயத்தினரிடையே அதிகரிக்கும் ‘பலான நோய்’ – ஷாக் சர்வே

admin Published: August 27, 2015 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News



இன்றைய காலக்கட்டத்தில் உலகமெங்கும் * 57 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

* பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம்.

* ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.

* 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் இந்த வயதுதான். 30 சதவீதம் பேர் 13-14 வயதினர்.
edit aug 27
இப்படி குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்கிற வர்கள், பீடோபீலியா (Peadophilea) என்ற வக்கிர புத்தி கொண்டவர்கள். இது ஒரு மனநோயாகவும் கருதப்படுகிறது. சிறுவர்- சிறுமியர்கள் மூலம் இன்பமடையும் வக்கிரவாதிகள் மேலைநாடுகளில் அதிகம். `சைல்டு செக்ஸ் டூரிசம்’ என்ற பெயரில் அவர்களை சில சமூக விரோத அமைப்புகள் ஆசிய நாடுகளுக்கு அழைத்து வருகின்றன. முன்பு தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பாதித்த இந்த பாதகர்கள் இப்போது இந்தியாவில் ஒடிசா, கோவா, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு ரகசியமாக வந்து `ஆசைகளை’ தீர்த்துவிட்டு போகிறார்கள்.

மேலும் இது தொடர்பான கடந்த ஆண்டு எடுத்த கணக்கெடுப்பு ஒன்று நமக்கு இன்றளவும்அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களில் 23 சதவீதத்தினர் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்கிறார்கள். 29 சதவீதத்தினர் 16 முதல் 18 வயதிற்கு உள்பட்டவர்கள். 2005-ம் ஆண்டு இந்தியாவில் 44,476 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார் கள். அவைகளில் 11,008 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்கள் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

*குழந்தைகளை எளிதாக ஏமாற்ற முடியும்.

* குழந்தைகள் காட்டிக்கொடுக்காது.

* குழந்தைகளுக்கு விளைவுகளை புரியத்தெரியாது. எதிர்ப்பு தெரிவிக்காது.

* தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குழந்தைகளுக்கு விளக்கத் தெரியாது.விளக்கினாலும் பெற்றோர் அதை நம்பமாட்டார்கள்.

* வயதானவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சும் பாவனையில் வக்கிர செயலில் ஈடுபடும் போது, பெற்றோருக்கு சந்தேகம் வராது.

*ஆண்மை அதிகரிக்கும், ஆயுள் நீடிக்கும் போன்ற மூட நம்பிக்கைகள்.

இப்படிப்பட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. கற்பனைக்கு எட்டாதவிதத்தில்கூட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இதனிடையே போதுமான விழிப்புணர்வற்ற நிலையில் செக்ஸுல் சிறுவர்,சிறுமிககள் ஈடுபடுவதால் செக்ஸ் தொடர்பான நோய்களும் இவர்களை அதிக அளவில் தாக்க ஆரம்பிப்பதாக சமீபத்திய மற்றோரு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது பெரும்பாலான சிறார்களுக்கு பாதுகாப்பான செக்ஸ் குறித்துத் தெரிவதில்லை. இதனால் அவர்களுக்கு எச்ஐவி உள்ளிட்டவை தாக்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. மிகவும் சிறிய வயதிலேயே இதுபோன்ற செக்ஸ் நோய்கள் அவர்களைத் தாக்குவதும் அதிகரித்துள்ளதாக இரு ஸ்பாட் சர்வே நடத்திய இணையதளத்தைச் சேர்ந்த டாக்டர் தேப்ராஜ் ஷோம் கூறுகிறார்.

நாடெங்கிலும் உள்ள 20 நகரங்களில் 13 முதல் 19 வயதுக்குட்பட்ட 15,000 சிறுவர் சிறுமிகளிடம் இதுதொடர்பாக சர்வே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது சிறார்கள் தங்கள் முதல் செக்ஸ் அனுபவத்தை அல்லது புரியா அவஸ்தையை சராசரியாக ஆண்களுக்கு 13.72 , சிறுமிகளுக்கு 14 வயது ஆகவும் உள்ளது. அதாவது இரு பாலினருமே சராசரியாக 14 வயதிலேயே செக்ஸ் தொடர்பை சந்திக்கும் நிலை உள்ளது. சர்வே முடிவு கூறுகிறது. நாடெங்கும் 20 நகரங்களில் 13 முதல் 19 வயதுக்குட்பட்ட 15,000 சிறுவர் சிறுமிகளிடம் இது தொடர்பாக சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

இக்குழு சந்தித்த பையன்களில் 6.3 சதவீதம் பேர் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொண்டதாக தெரிவித்தனர். சிறுமிகளில் 1.3 சதவீதம் பேர் ஒருமுறை செக்ஸ் வைத்துக் கொண்டதாக சொன்னார்கள், அத்துடன் பெரும்பாலும் 15 முதல் 24 வயதுக்குள் ஆண்களும், பெண்களும் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொண்டதாக பரவலாக கூறியுள்ளனர். இது ஆண்களிடம் 15 முதல் 22 சதவீதமாகவும், பெண்களில் 1 முதல் 6 சதவீதமாக உள்ளது இவ்விவகாரத்தால் இந்தியாவில் இளம் பிராயத்தினர் மத்தியில் செக்ஸ் நோய்கள் சகட்டுமேனிக்கு பரவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இச்சர்வே இப்போக்கு குறித்து பெரிதும் கவலை தெரிவித்துள்ளது

உடனடி செய்திகள்