கூகுளாண்டவரின் தலைமைப் பூசாரியானார் தமிழர் சுந்தர் பிச்சை!
கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு பதிமூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்தனையாண்டு பாதை யில் அதன் இமாலய வெற்றியைப் பார்க்கையில், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்நிறுவனம் என்ன செய்திடுமோ என்று பலரும் வியந்துக் கொண்டிருந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி கள் மட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (43) நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இங்குள்ள ஜவஹர் வித்யால்யா(?) பள்ளியில் படித்த சுந்தர் பிச்சைதான் கூகுள் நிறுவனத்தில் ஆண்ட்ராய்ட், கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் ஆப்ஸ் போன்ற பிரிவுக்குத் தலைவர். 2004-ம் ஆண்டு இந்த கூகுள் நிறுவனத்துக்குள் நுழைந்த சுந்தர் பிச்சை, நவீனமயங்களை விரைவாக உருவாக்குவதில் வல்லவர். ‘ பலரும் இன்னொரு பிரவுஸர் தேவையா? எடுபடுமா என்றெல்லாம் சந்தேகப் பட்டவர்கள் வாயை அடைப்பது போல் கூகுள் க்ரோமை அறிமுகப்படுத்தி வியப்படைய வைத்தவர்.
இன்றைய இண் உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான பிரவுஸர் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது க்ரோம். அத்துடன் உலகின் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்களில் இடம் பிடித்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஸை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றிருப்பவர் சுந்தர் பிச்சை. இதனிடையே மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் சுந்தருக்கு வலைவிரித்த ஒவ்வொரு முறையும், கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் போனஸ் கொடுத்து சுந்தரைத் தக்கவைத்து கொண்டது கூகுள்!
மேலும் அங்கு ஆப்ஸ் மேம்பாட்டு துறைக்குத் தலைமை தாங்கினார். ஜி-மெயில் ஆப்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸ்களை உருவாக்கியதில் இவரது பணி குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கூகுள் இவரைத் தனது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப் படும் ஆண்ட்ராய்டு ஒன் செல்போன்களை உருவாக்கும் பொறுப்பை வழங்கியது. இவரின் பங்களிப்புடன் இன்டர்நெட் பிரிவில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், கூகுள் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. சுமார் பத்தாண்டு செயல்பட்ட பின்னர், கூகுள் ஆண்டு வருமானம் 2,000 கோடி டாலர். 33 ஆண்டுகளுக்குப் பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருமானம் 6,000 கோடி டாலர். கூகுள் நிறுவனத்தின் அலுவலர் எண்ணிக்கை ஏறத்தாழ 20,000. சராசரியாக, கூகுள் நிறுவன ஊழியர் ஒருவர் தன் நிறுவனத்திற்கு 10 லட்சம் டாலர் சம்பாதித்து தருகிறார். மைக்ரோசாப்ட் ஊழியர் 67,200 டாலர் ஈட்டித் தருகிறார்.தேடல் சாதனத்தினைப் பொறுத்தவரை, கூகுள், ஒரு மாதத்தில்ல் 7,800 கோடி தேடல்களைக் கொண்டிருகிறதாம்..
இதனிடையேதான் கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் லாரி பேஜ் திங்கள்கிழமை இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பேஜ், தனது வலைப்பகத்தில், “ஆல்ஃபபெட் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது. அதில் கூகுளும் முக்கிய பங்கு வகிக்கும். புதிதாக தொடங்கப்படும் ஆல்ஃபபெட் நிறுவனத்துக்கு நான் சிஇஓ-வாக இருப்பேன். எங்கள் நிறுவனம் இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை இன்னமும் மேம்படுத்தும் வகையில் ஆல்ஃபபெட் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. கூகுளின் சிஇஓ-வாக இனி சுந்தர் பிச்சை செயல்படுவார். இதுதவிர புதிதாக தொடங்கப்படும் ஆல்ஃபபெட் நிறுவனத்திலும் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருக்கும்.
சென்னையில் பிறந்த இவர் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்தவர். அதன் பிறகு ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். சுந்தரின் பணி அர்ப்பணிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர் இத்தகைய உயர் பதவிக்கு தகுதியானவரே. அவரைப் போன்ற அறிஞர் ஒருவர் கூகுள் தலைமைப் பொறுப்பை ஏற்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


