உலகத்தின் அதி பெரிய சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப்! – இது ஒரு சைனா தயாரிப்பு
உலகத்தின் அதி சக்தி மற்றும் பெரிதான FAST டெலிஸ்கோப்பை சைனா ரகசியமாக உருவாக்கி வருகிறது. இது 2016 முதல் இயங்க தொடங்கும். பெரிது என்றால் அம்மாம் பெரியது – அதாவது 30 கால்பந்து மைதானங்களின் அளவுக்கு பெரிதான ஒன்றுன்னா பார்த்துக் கொள்ளுங்களேன்..

இன்னும் ஷார்ட் அண்ட் சுவையா சொல்றதுன்னாஇந்த டெலஸ்கோப்பின் குறுக்கு வாகில் நடக்க தொடங்கினால் 1.6 கிலோமீட்டரும் இதனை சுற்றி வருவதற்க்கு 40 நிமிடங்களும் ஆகும் அளவுக்கு பெரியது. இந்த டெலஸ்கோப்பின் பணி 2010 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2016 ஆம் ஆண்டு முடிவடையும் அளவுக்கான பெரிய பிராஜக்ட்.
இது சாதாரண பெரிய டெலஸ்கோப் என்பதை விட உலகத்தின் அதி பெரிய சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப் என்பதாகும். இதன் மூலம் ஜெனித் ஆங்கிள் மற்றும் சிறு சிறு கோள்களின் சத்ததை கூட விஞ்ஞானிகள் இங்கிருந்தபடியே பெற முடியும் என்பது ஆச்சர்யமான விஷயம்.
இந்த டெலஸ் கோப் அமைந்த இடத்தை சுற்றி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு எந்த ஒரு வீடோ நகரமோ கிடையாது என்பதால் மிகவும் அமைதியான ஜோன் ஆகவும் இருக்கும்படி அமைத்திருக்கிறது. அது போக இவ்வளவு பெரிய டெலஸ்கோப்பில் விழும் மழை நீரை சேமித்து பூமிக்கு கொண்டும் பிராஜக்ட்டையும் இணைத்து இருக்கின்றனர் என்பது அடிசினால் தகவலுங்கோ.
MAST – Giant Telescope is getting ready


