வின்டோஸ் 10 – ஐ நாளை முதல் இலவசமாய் அப்கிரேட் பண்ணிக்கலாமுங்கோ!
உலகின் மிகப்பெரிய கணனி ஓஎஸ் என்னும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மார்க்கெட்டை வைத்திருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன் கடைசி ஒஎஸ் என அறிவித்து இருக்கும் வின்டோஸ்10 எதிர் பார்ப்பை சந்தையில் தினமும் அதிகரிக்க வைக்கிறது. வின்டோஸ் 10 கணனி / லேப்டாப் / டேப்ளேட் / மொபைல் என அத்தனை பொருட் களுக்கும் ஒரே வகையான ஓ எஸ் இனிமே என்று அறிவித்து இருப்பதால் இந்த வின்டோஸ்10 வாங்க இப்பவே லைன்ல ரெடி.

அட..இப்பதானே வின்டோஸ் 7/8 அல்லது 8.1 ஓஎஸ்ஸை வாங்கினேன் அதுக்குள்ள இன்னொன்றை வாங்க வேண்டுமா என்று நீங்கள் கேட்டால் தேவையில்லை. புதுசா வாங்கினா சுமார் 10,000 ரூபாய்க்கு மேல். ஏதாவது ஒரு லீகல் வின்டோஸ் ஓ எஸ்ஸை வைத்திருந்தால் நீங்கள் இலவசமாய் கிடைக்க பெறலாம். அதுவும் நாளை ஜூலை 29 ஆம் தேதி உங்கள் கணனியிலே அப்டேட் செய்யுமாறு மைக்ரோசாஃப்ட் அமைத்திருக்கிறது. இதை இலவசமாக அப்கிரேட் செய்ய நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய மூன்று விஷயங்கள் என்ன?
1. முதலில் உங்கள் ஓ எஸ்ஸை அப் டு டேட் அப்டேட் செய்யுங்கள். அப்படி செய்தால் கீழ் வலது புறத்தில் ஒரு சிறிய வின்டோஸ் ஐகான் வரும். (படத்தில் காணுங்கள்).
2. அதை கிளிக் செய்தால் உங்கள் ஓஎஸ் ஒரிஜினலாக இருப்பின் அதில் உங்கள் பிசிக்கு அப்கிரேட் செய்ய முடியுமா என உங்கள் கணனியை ஆயுவு செய்து – உங்கள் கணனி அப்கிரேட்டுக்கு தயார் – அனைத்து உபகரணங்களுக்கும் இதன் டிரைவர் சரியாக உள்ளது என தெளிவுபடுத்தும்.
3. பின்பு அந்த ஆய்வு முடிந்த பிறகு அதே கீழ் வலப்பக்க வின்டோஸ் ஐகானை கிளிக் செய்தால் எப்போது உங்களுக்கு இலவச அப்கிரேட் / உங்களுக்கு எப்படி டவுன்லோட் அலெர்ட் வரும் என்ற செய்தியை அறிவிக்கும் மைக்ரோசாஃப்ட்.
இதில் ஏதும் குளறுபடி இருந்தால் உங்கள் நாட்டின் மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் 10 பிராடக்ட் டிவிஷனை அணுகவும்.
Windows 10 upgrade from tomorrow –


