32°C
விளம்பரம்
Advertisement

ஏர் இந்தியா மழைக்காலத்தை முன்னிட்டு குறுகிய கால சலுகையாக ரூ.1,777-க்கு டிக்கெட்!

admin சேலம் Published: June 10, 2015 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




உலகிலேயே மிகவும் குறைந்த விமான கட்டணத்தில் பயணம் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. மலேசியா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பி்டுகையில் இந்தியாவில் 100 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்ய வெறும் 10.36 டாலர்களே செலவாகிறது. ஆனால், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, போன்ற நாடுகளில் இதே 100 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கு 139.90 டாலர்கள் வரை செலவாகின்றன. அதிக விமான கட்டணம் உள்ள நாடுகள் பட்டியலில் லிதுவானியா, ஆஸ்திரியா, எஸ்டோனியா போன்ற நாடுகள் உள்ளன.
air travel jun 10
இந்நிலையில் நம் இந்தியாவில் சமீபகாலமாக ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் வகையில் ரூ.100, ரூ.500 என கட்டண சலுகையை அவ்வபோது அள்ளி வீசி வரும் நிலையில் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா குறுகிய கால சலுகையாக மழைக்காலத்தை முன்னிட்டு ரூ.1,777-க்கு டிக்கெட் வழங்குகிறது. இந்த டிக்கெட் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பல தனியார் விமான நிறுவனங்கள் கோடை கால விடுமுறை சீசன் நிறைவடைந்ததால் விமான கட்டணங்களை வெகுவாக குறைத்துள்ளதன் எதிரொலியாக ஏர் இந்தியா இந்த சலுகையை அறிவித்துள்ளது.

டிஸ்கவுண்ட் அடிப்படையில் வழங்கப்படும் இந்த டிக்கெட்டுகளை வரும் 10-ந்தேதி வரை ஆன்லைனில் புக்கிங் செய்யலாம். இதுதவிர, ஏர் இந்தியாவின் இணையதளம், ஏர் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜெண்டுகள் மற்றும் ஏர் இந்தியா வழங்கியுள்ள இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி வரும் ஜூலை 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதிக்குள் பயணம் செய்யலாம். ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, ஏர் ஏசியா போன்றவை இதுபோன்ற சலுகை விலை கட்டணங்களை கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்