போட்டோ மூலம் வயசைச் சொல்லும் வெப்சைட்! – மைக்ரோசப்ட் கண்டுபிடிப்பு!
கடந்த ஓராண்டாக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பது விண்டோஸ் 10. வழக்கமான விண்டோஸ் இண்டர்பேஸை முற்றிலுமாக மாற்றியிருப்பதாக கூறும் மைக்ரோசாப்ட் யூசர் பிரெண்ட்லியாக நிறைய ஆப்ஸ்களை பாதுகாப்பு உறுதியுடன் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு நவீனமாக்கியிருக்கிறது.

குறிப்பாக, வழக்கமான இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு பதிலாக ஸபார்ட்டரான் எனும் புதிய பிரவுஸரை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்துகிறது. மேலும், பாஸ்வேர்டு இல்லாமல் கைரேகை, முகம் மற்றும் ஐரிஸ் ஐடென்டிபிகேஷன் வழியாக கம்ப்யூட்டரை திறக்கும் புதிய முறையும் அறிமுகமாகிறது. விண்டோஸ் ஹலோ என்ற இந்த புதிய வசதியில், நாம் எழுத்துக்களை பாஸ்வேர்டாக கொடுக்க வேண்டியதில்லை. மாறாக, நமது முகத்தையே அடையாளமாகக் கொண்டு ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரை திறக்கலாம்.
இது ஹேக்கர்களிடமிருந்து நமது கம்யூட்டர்களையும் பாதுகாக்கும். ஆனால், இந்த புதிய பாதுகாப்பு அம்சமானது இனிமேல் வெளிவர உள்ள லேட்டஸ்ட் கருவிகளில் மட்டுமே இயங்கும். குறிப்பாக, RealSense F200 sensor கொண்ட சிப்களில் மட்டுமே இது இயங்கும். இதுபோன்ற, நடைமுறை சிக்கல்கள் பல இருப்பினும் விண்டோஸ் 10-ல் வெளியாகும் இந்த வசதி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முகத்தை பார்த்தே வயதை துல்லியமாக கண்டுபிடிக்கும் புதிய வெப்சைட்டை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. How-Old.net என்ற அந்த வெப்சைட்டை தற்போது முழுமையாக தயாரிக்காவிடிலும் சோதனை அடிப்படையில் இயங்கி வருகிறது. பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிமையான வெப்சைட்டாக இருக்கிறது. வயதை கண்டுபிடிக்க நம்முடைய போட்டோவை அந்த வெப்சைட்டுக்கு சென்று அப்லோடு செய்தால் போதும். போட்டோவில் உள்ளவரின் வயதை கூறி விடுகிறதாம்.


