32°C
விளம்பரம்
Advertisement

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

admin சேலம் Published: September 23, 2013 1 நிமிட வாசிப்பு வேலை வாய்ப்பு
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இந்தியாவின் உள்கட்டுமானம் மற்றும் எரிசக்தி தொடர்புடைய துறைகளில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் (பி.எச்.இ.எல்.,) பெல் நிறுவனம் மிகவும் பெரிய மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஐதராபாத் கிளையில் ஆர்டிசன் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
sep 23 BHEL_

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்
: மெஷினிஸ்ட் – 245, டர்னர்-164, பிட்டர்-285, பிளாக்ஸ்மித்-5, வெல்டர்-59, கார்பெண்டர்-5, எலக்ட்ரீசியன்-37

வயது
: 01.09.2013 அன்று 27 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தகுதிகள் : பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு என்.ஏ.சி., என்.டி.சி., படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். தெலுங்கு மொழி தெரிந்தால் நல்லது.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு / நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை
: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.125/-ஐ Power Jyoti Account No. 32838381735 என்ற அக்கவுண்ட் எண்ணில் Bharat Heavy Electricals Limited, Ramachandrapuram, Hyderabad என்ற பெயரில் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை ஆன்-லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்
: 05.10.2013

முழுமையான விபரங்களை இணையதளம் வழியாக அறிய: http://recruit1.bhelhyd.co.in/

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்