32°C
விளம்பரம்
Advertisement

கிராமப்புற வங்கிகளில் 13,706 காலிப்பணியிடங்கள்:ஐபிபிஎஸ் (IBPS) அறிவிப்பு!

admin Published: September 3, 2026 4 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


கிராமப்புற வங்கிகள் அல்லது பிராந்திய கிராமப்புற வங்கிகள் (Regional Rural Banks – RRBs) என்பவை இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயக் குடிமக்கள், சிறு குறு விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் கிராமப்புறத் தொழில்முனைவோர்களுக்குத் தேவையான கடன் மற்றும் வங்கிச் சேவைகளை வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட பிரத்யேக நிதி நிறுவனங்களாகும். இந்த வங்கிகள் அனைத்தும் மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் புரவலர் வணிக வங்கிகள் (Sponsor Banks) ஆகியவற்றின் கூட்டுப் பங்களிப்புடன் மத்திய அரசின் சட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இதன் முக்கியச் செயல்பாடுகளாகக் கிராமப் பகுதிகளில் சேமிப்புக்கணக்குகளைத் தொடங்குவது, விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழில்களை மேம்படுத்த எளிய முறையில் கடனுதவி வழங்குவது, அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்களைச் சரியான முறையில் உரியவர்களிடம் சேர்ப்பது மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மலிவான வட்டி விகிதத்தில் நிதி சேவைகளைக் கொண்டு சேர்ப்பது ஆகியவை விளங்குகின்றன. இந்த வங்கிகளின் நிர்வாகமானது மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படியும், ஒவ்வொரு வங்கியின் தலைமையகத்தில் செயல்படும் நிர்வாகக் குழு மற்றும் தலைவர் மூலமாகவும் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு முறைப்படுத்தப்படுகிறது. அப்படி நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (Regional Rural Banks – RRBs) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 13,706 காலிப்பணியிடங்கள் இந்த முறை நிரப்பப்பட உள்ளன. 

காலியிடங்களின் முழு விவரம்

அலுவலக உதவியாளர் (Office Assistant – Multipurpose): 8,183 பணியிடங்கள்

அதிகாரி நிலை-1 (Officer Scale-I / Assistant Manager): 4,256 பணியிடங்கள்

அதிகாரி நிலை-2 (General Banking Officer – Manager): 666 பணியிடங்கள்

அதிகாரி நிலை-2 (Information Technology Officer): 182 பணியிடங்கள்

அதிகாரி நிலை-2 (Chartered Accountant – CA): 81 பணியிடங்கள்

அதிகாரி நிலை-2 (Law Officer): 46 பணியிடங்கள்

அதிகாரி நிலை-2 (Agriculture Officer): 38 பணியிடங்கள்

அதிகாரி நிலை-2 (Treasury Manager): 18 பணியிடங்கள்

அதிகாரி நிலை-2 (Marketing Officer): 16 பணியிடங்கள்

அதிகாரி நிலை-3 (Senior Manager): 220 பணியிடங்கள்

கல்வித் தகுதி மற்றும் உள்ளூர் மொழி அறிவு

அலுவலக உதவியாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.

பிற சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அந்தந்தத் துறைசார்ந்த பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்திருப்பது கட்டாயமாகும். மேலும், கணினி இயக்கும் அடிப்படை அறிவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரங்கள் (01.09.2026 நிலவரப்படி)

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் (02.09.1998 முதல் 01.09.2008 வரை பிறந்திருக்க வேண்டும்).

துணை மேலாளர் (Scale-I) பணியிடங்களுக்கு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் (02.09.1996 முதல் 01.09.2008 வரை பிறந்திருக்க வேண்டும்).

பிற அதிகாரிகள் (Scale-II & III) பணியிடங்களுக்கு: 21 முதல் 32/40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.

தேர்வு செயல்முறை மற்றும் விபரங்கள்

அலுவலக உதவியாளர் மற்றும் துணை மேலாளர் பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத் தேர்வு (Main Exam) மற்றும் அலுவலக உதவியாளருக்கு நேர்முகத் தேர்வு கிடையாது (துணை மேலாளருக்கு நேர்முகத் தேர்வு உண்டு).

பிற அதிகாரி பணியிடங்களுக்கு ஒரே ஒரு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மட்டுமே நடத்தப்படும்.

அனைத்துத் தேர்வுகளும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வு முறை (80 மதிப்பெண்கள்):

திறனறிதல் (Reasoning Ability): 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள் (25 நிமிடங்கள்)

கணிதத் திறன் (Numerical / Quantitative Aptitude): 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள் (20 நிமிடங்கள்)

மொத்தம் 80 கேள்விகள், 45 நிமிடங்கள் கால அளவு வழங்கப்படும். இது தகுதித் தேர்வு மட்டுமே. இத்தேர்வு நவம்பர் அல்லது டிசம்பர் 2026-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு முறை (200 மதிப்பெண்கள்):

திறனறிதல் (Reasoning): 40 கேள்விகள் – 50 மதிப்பெண்கள்

கணினி அறிவு (Computer Knowledge): 40 கேள்விகள் – 20 மதிப்பெண்கள்

பொது அறிவு / வங்கி விழிப்புணர்வு (General / Financial Awareness): 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்

ஆங்கில மொழி (English Language): 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள்

இந்தி மொழி (Hindi Language): 40 கேள்விகள் – 40 மதிப்பெண்கள் (ஆங்கிலம் அல்லது இந்தி இரண்டில் எதையேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்)

கணிதத் திறன் (Quantitative Aptitude): 40 கேள்விகள் – 50 மதிப்பெண்கள்

மொத்தம் 200 கேள்விகள், 200 மதிப்பெண்கள், 2 மணி நேரம் கால அளவு. இத்தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே இறுதி வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் முறை

பொதுப் பிரிவு, ஓபிசி மற்றும் இட்யூஎஸ் (EWS) பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம்: ரூ.850

எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு: ரூ.175

தகுதியுள்ளவர்கள் https://www.ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியமான தேதிகள்

ஆன்லைன் பதிவு தொடங்கிய நாள்: 01.09.2026

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.09.2026

உடனடி செய்திகள்