ரயில்வேயில் 11,172 கார்ப்பரேட் பணியிடங்கள்: அசிஸ்டெண்ட் லோகோ பைலட் வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் பணிபுரிய வேண்டும் என்பது நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களின் பெரும் கனவாக உள்ளது. அந்த கனவை நனவாக்கும் வகையில், இந்திய ரயில்வே வாரியம் (RRB) தற்போது மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு (CEN No. 01/2026) வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
ரயில்வே துறையில் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் வரும் இந்த அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கப் பின்வரும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

-
ITI: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவுகளில் ITI முடித்தவர்கள்.
-
டிப்ளமோ (Diploma): பொறியியல் துறையில் (Engineering) டிப்ளமோ டிப்ளமோ முடித்தவர்கள்.
-
பொறியியல் பட்டப்படிப்பு (Bachelor’s Degree in Engineering): மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது ஆட்டோமொபைல் போன்ற பொறியியல் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் (B.E / B.Tech) இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
வயது வரம்பு மற்றும் தளர்வுகள்
-
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
-
மத்திய அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (OBC, SC, ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்) அரசு விதிகளின்படி வழக்கமான வயது வரம்பு தளர்வுகளும் வழங்கப்படும்.
முக்கிய தேதிகள்: நினைவில் கொள்ள வேண்டியவை
ரயில்வே லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் காலக்கெடுவுக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
-
விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள்: 15 மே 2026
-
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 14 ஜூன் 2026
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள தகுதியான நபர்கள் ஆன்லைன் (Online) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
-
விண்ணப்பதாரர்கள் ரயில்வே தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ சென்னை மண்டல இணையதளமான www.rrbchennai.gov.in என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும்.
-
அங்கு முகப்புப் பக்கத்தில் உள்ள “CEN No. 01/2026 – Recruitment of Assistant Loco Pilot (ALP)” என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
-
“Click here – Apply Online” என்பதைத் தேர்ந்தெடுத்து, தங்களின் விவரங்களைப் பிழையின்றிப் பதிவு செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
-
விண்ணப்பிக்கும் முன்பாக இணையதளத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை (Official Notification) முழுமையாகப் படித்துப் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மத்திய அரசுப் பணியில் சேரக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு, குறிப்பாகத் தொழிற்கல்வி மற்றும் பொறியியல் முடித்தவர்களுக்கு, இந்த 11,172 பணியிடங்கள் ஒரு பொன்னான வாய்ப்பாகும். தகுதியானவர்கள் தாமதிக்காமல் இறுதி நாளுக்கு முன்பாகவே விண்ணப்பித்துப் பயனடையலாம்!


