32°C
விளம்பரம்
Advertisement

தமிழகம் வளர்ந்த மாநிலமா?

admin சேலம் Published: January 1, 2025 1 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



தமிழ்நாட்டில் மொத்தம் 2,24,13,920 குடும்ப அட்டைகள் உள்ளன. அவற்றில் 2.09 கோடி அரிசி அட்டைகள். இவர்களுக்கெல்லாம் பொங்கல் பரிசுத் தொகுப்பு உண்டு.மீதமுள்ள சுமார் 15 இலட்சம் அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடையாது. தமிழக அரசின் கணக்குப்படி, இந்தப் பதினைந்து இலட்சம் குடும்பங்கள் மட்டும்தான் பச்சரிசி, செங்கரும்பு, வெல்லமெல்லாம் விலைக்கு வாங்கிப் பொங்கல் கொண்டாடும் கொழுகொழு பணக்கார நிலையில் உள்ளன.

ஏனைய 2.09 கோடிக் குடும்பங்களும் விலை கொடுத்து அரிசி வாங்கிப் பொங்கல் கொண்டாட முடியாத அவல நிலையில்தான் உள்ளன. அதனால்தான் அரசே அவர்களுக்குக் கருணையோடு பொங்கல் பரிசுத் தொகுப்புக் கொடுக்கிறது. மிக நல்ல விஷயம். வாழ்த்துகிறோம்.

என்றாலும் ஒரு நெருடல். இன்னமும் 2.09 கோடிக் குடும்பங்கள், அரிசியும் வெல்லமும் மற்ற பொருள்களும் பரிசாகக் கிடைத்தால்தான் பொங்கலே கொண்டாட முடியும் என்கிற நிலையில், அந்த மாநிலம் எப்படி வளர்ந்த மாநிலமாக இருக்க முடியும்?

இந்தக் கேள்வி நியாயமானதா அல்லது முட்டாள்தனமானதா? தமிழக அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

செ. இளங்கோவன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்