“சாதிப்பதற்கு திறமைதான் முக்கியம், படிப்பு அல்ல” -குஷ்பூ ரியாக்சன்

“சாதிப்பதற்கு திறமைதான் முக்கியம், படிப்பு அல்ல” -குஷ்பூ ரியாக்சன்

சாதிப்பதற்கு திறமைதான் முக்கியம் படிப்புமுக்கியமல்ல என ஸ்மிர்தி இரானிக்கு, நடிகை குஷ்பு ஆதரவாக டுவிட்டரில் ரியாக்ட் பண்ணியுள்ளார்
kuspoo and minister
தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக உள்ள குஷ்பு, நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து பேசினார்.இந்நிலையில் தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய வெளியுறவு துறை மந்திரியாக பொறுப்பு ஏற்றுள்ள சுஷ்மா சுவராஜை குஷ்பு டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.தன் வாழ்த்தில்,”சுஷ்மாஜி, தங்களுக்கு என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தைரியம் மற்றும் சீரிய முயற்சியால் அந்நிய சக்திகள் வாலாட்ட முடியாது. நீங்கள் சிறப்பான சேவையாற்றுவீர்கள். வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.இது போல் கல்வி தகுதி சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய மந்திரி ஸ்மிருதி ராணிக்கும் குஷ்பு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அத்துடன் ஸ்மிர்தி இரானி சர்ச்சை குறித்து குஷ்பு தனது டுவிட்டர் தளத்தில், ”ஸ்மிர்தி இரானியின் கல்வி தகுதி பற்றி விமர்சிக்கப்பட்டு வருகிறது. சாதிப்பதற்கு கல்வி தகுதி அவசியம் இல்லை. சச்சின் தெண்டுல்கர், பில்கேட்ஸ், ரஜினி, கமல், உள்ளிட்டோர் உலக அளவில் புகழ் பெற்றுள்ளனர். இவர்கள் பட்டபடிப்பு படித்தவர்கள் அல்ல. சாதிப்பதற்கு திறமைதான் முக்கியம், படிப்பு அல்ல” எனக் கூறியுள்ளார்.

Related Posts