சகலகலா வல்லவன் ரிலீஸான தினமின்று🫶

சகலகலா வல்லவன் ரிலீஸான தினமின்று🫶

கொரோனா முடக்கியக் காலக் கட்டத்தில் கோடம்பாக்க தத்துவஞானி விஜய் சேதுபதி ஆன்லைனில் கமலை பேட்டிக் கண்ட போது கமல் சொன்னது

சகலகலா வல்லவன்‘ படத்தை எல்லோரும் திட்டுவாய்ங்க. பாலுமகேந்திரா கூட திட்டி இருக்கார். அப்படி ஃப்ரண்ட்ஸ் அம்புட்டு பேரும் திட்டியதில் எனக்கு பப்பி ஷேமா புடுச்சு . அதை சமாளிக்க நானும் சேர்ந்து படத்தைத் திட்டியிருக்கிறேன். அப்புறம் யோசித்துப் பார்த்தேன். நான் அந்த வழியைத் தொடாமல் போயிருந்தால் என்னால் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தையே ஆரம்பித்திருக்க முடியாது. ஏன்னா, சினிமா என்பது டிக்கெட் போட்டு செய்யும் வியாபாரம்தானே. நான் தர்மத்துக்காக நடிக்கலையே. தியாகய்யர் தஞ்சாவூர் வீதிகளில் ராமனைப் போற்றிப் பாடி யாசகம் பெற்றதைப் போல நான் செய்யலையே? எனக்கு கார் வாங்கோணும், அதனால் என் படம் நெறய் டிக்கெட் விற்கோணும் முன்னு ஆசை. எம்ஜிஆர், சிவாஜி போல ஆக வேண்டும் என்று ஆசை. அப்படி இருக்கும்போது மக்களை மகிழ்விக்க மாட்டேன் என்று ஏன் வீம்பு கொள்ளோணும் அப்பட்டீன்னு கோட் செஞ்ச சகலகலா வல்லவன் 1982 இதே ஆகஸ்ட் 13இல் ரிலீஸாச்சு.

இப்பல்லாம் ஆழமான கதை இருக்கும் படமென்றால் லாஜிக் மீறல்கள் இருக்கபடாது 0ன்னும் பொழுதுபோக்குப் படமுன்னா லாஜிக் ஓட்டைகளெல்லாம் இருந்தால் தப்பில்லை =ன்னும் ஓப்பனாச் சொல்லி தப்புக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கோம் . அப்படித்தான், காமெடிப் படமா… லாஜிக் தேவையில்லை, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட மசாலாப் படமா… லாஜிக் வேண்டும் என்கிற கட்டாயமில்லை அப்படீன்னு படங்களும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனா, பக்கா பொழுதுபோக்கு கொண்ட கதையில், ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் வச்சு வந்த படத்தில், இருக்கு ஆனா இல்லை என்ற புது லாஜிக்குகளுடனும் வந்த பக்கா பேக்கேஜ் படமே… ‘சகலகலா வல்லவன்’.(கட்டிங் கண்ணையா)

‘சகலகலா வல்லவன்’ ஆக்‌ஷன் படமா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்லலாம்.பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படமா என்று கேட்டால் அதற்கும் பதில் ஆமாம் என்று தலையாட்டலாம். மசாலாப் படமா இது என்று கேட்டால், அதற்கும் அதே பதிலைச் சொல்லிடலாம். சென்டிமென்ட் படமா என்றாலும் குடும்பப் படமா என்றாலும் இதே ஆமாய்யா ஆமாங்கற பதிலைத்தான் சொல்லியாகவேண்டும். அப்படி சகலருக்கும் பிடிச்ச படமாகத் தந்ததில்தான் அடங்கியிருக்கிறது ‘சகலகலா வல்லவனின்’ வெற்றி!

சினிமாவுக்கு, அதிலும் பொழுதுபோக்கு சினிமாவுக்கு ஒரு வரியைக் கொண்டு கதை எழுதிவிடலாம். தங்கையைக் கெடுத்தவனை திருத்தி தங்கையை அவனிடம் சேர்க்கிறான் நாயகன். கர்வத்துடன் திரியும் பணக்கார நாயகியின் கொட்டத்தை அடக்கி அவளைத் திருமணம் செய்துகொண்டு அவளைத் திருத்துறான் ஹீரோ. இந்த இரண்டு வரிகளையும் வைத்துக்கொண்டு, இணைத்து, குழைத்து, திரைக்கதையாக்கிக் கொடுத்திருப்பதுதான் பஞ்சு அருணாசலத்தின் வியாபார ஜாலம்.

ஏவிஎம் படமென்றால், பஞ்சு அருணாசலம் கதை, வசனம் இருக்கும். பாபு ஒளிப்பதிவு செய்வார். விட்டல் எடிட்டிங் வேலையைச் செய்வார். ஏவிஎம்மின் செல்லப்பிள்ளை எஸ்.பி.முத்துராமன், மிக அருமையாகவும் தெளிவாகவும் படத்தின் ‘மூட்’ என்னவோ அவற்றை நமக்குக் கடத்திவிடுவார். இப்படியான கூட்டணியுடன் வந்த ‘சகலகலா வல்லவன்’ மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.இடைவேளை வரை குடுமியுடன் இருக்கும் போது குண்டாக இருக்கிற கமல், இடைவேளைக்குப் பிறகு பணக்காரராக அமெரிக்க ரிட்டர்னாக கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு டிஸ்கோ ஆடுவார். அப்போதெல்லாம் ஒல்லியாக இருப்பார். முன்னதாகப் பேசுகிற கிராமத்து ஸ்லாங்கும் பின்னே பேசுகிற அமெரிக்க இங்கிலீஷும் கொண்டு அசத்தியிருப்பார்.

இப்போ சொல்லணுமுன்னா ஒருபக்கம் பார்த்தால், எம்ஜிஆரின் ‘பெரிய இடத்துப் பெண்’, இன்னொரு பக்கம் சிவாஜியின் ‘பட்டிக்காடா பட்டணமா’ என்றெல்லாம் சாவகாசமாக நினைக்க வச்சாலும் படம் வெளியான சமயத்தில் எதைப்பற்றியும் யோசிக்கவிடாம, கதையில் செண்டிமெண்ட்டையும் வசனத்தில் கைதட்டலையும் பாடல்களில் சொக்கிப்போகவைச்சு, சண்டைக்காட்சிகளில் மிரளச் செஞ்சு… (எண்பதுகளில் ஜூடோ ரத்தினம்தான் சண்டைக்காட்சிகளுக்கெல்லாம் மாஸ்டர். படத்திலே ஒவ்வொரு சண்டைக்காட்சியும் மிரட்டியெடுக்கும். ஒவ்வொரு சண்டையையும் வெரைட்டியாக, அதிரடியாகப் பண்ணியிருப்பார் – இந்த பட ஷுட்டை நேரில் பார்த்திரேக்கேன் – எப்படின்னா சென்னை வந்து வடபழனியில் செட்டிலான என் வீட்டுக்கு அருகில் ஜூடோ ரத்தினம் குடித்த்னம் வந்தார்..அவருடம் அப்பவே திலகம் வார இதப் ரிப்போர்ட்டர்-ன்னு அறிமுமாகி பேமிலி புரண்ட் ஆன சூழலில் ஏவிஎம்மில் ஹாயாக போய் வரும் சூழலில் நடந்த ஷூட்_.என வசூலில் சாதனை செஞ்சுது ‘சகலகலா வல்லவன்.’ எஸ்.பி.முத்துராமனின் முழு கமர்ஷியல் வித்தைகளும் நிறைந்த கலகல படம் தான் ‘சகலகலா வல்லவன்’.(கட்டிங் கண்ணையா)

திரையிட்ட அம்புட்டு தியேட்டர்களிலும் டெய்லி 4 காட்சிகள் என்றால் நான்கு ஷோக்களும் ஹவுஸ் ஃபுல் போர்டு தொங்கவிடப்பட்டுச்சாக்கும். தியேட்டருக்குள் படம் பார்க்கச் சென்ற கூட்டத்தை விட மூன்று மடங்கு கூட்டம், டிக்கெட் கிடைக்காமல் திரும்பி போனாய்ங்க. பெரும்பான்மையான ஊர்களில், 150 நாட்களைக் கடந்தும், வெள்ளிவிழா அப்படீன்னு சொல்லப்படும் 175 நாட்களைக் கடந்தும் சில ஊர்களில் 250 நாட்களைக் கடந்தும் ஓடி, பிரமாண்டமான வசூல் சாதனையைப் படைச்சுது. அதுவரை, ஏ அண்ட் பி செண்டர் ஹீரோவாக இருந்த கமலஹாசனை, ஏ, பி, சி என அனைத்து ஏரியாக்களுக்கும் கொண்டு சென்று, கமர்ஷியல் ஹீரோவாகவும் வசூல் மன்னனாகவும் ஆக்கிய படமாக ‘சகலகலா வல்லவன்’ அமைஞ்சுது

இந்தப் படத்தில், டைட்டில் பாடலை இளையராஜா பாடியிருப்பார் . மேலும் ‘டைட்டிலைச் சொல்லும் பாடலாக’ ‘நான் தான் சகலகலாவல்லவன்’ என்ற பாடலை எஸ்.பி.பி. தன் குரலால் அதகளம் பண்ணியிருப்பார். ’இளமை இதோ இதோ’ என்கிற பாடல், படம் வெளியான ஆண்டில் இருந்து, இன்னி வரைக்கும் ஜனவரி 1ம் தேதி தொடங்குகிற டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் ஒலித்துக் கொண்டே இருக்குது. ‘நேத்து ராத்திரி யம்மா’வும் ‘இளமை இதோ இதோ’வும் பாடாத பாட்டுக் கச்சேரிகளே இல்லை அப்போது! கோயில் திருவிழாவில், பாட்டுக் கச்சேரி வைச்சா, இந்தப் பாடல் எப்போது பாடுவாய்ங்க =ன்னு ஆர்வத்துடன் காத்துக்கிடந்தாய்ங்க தமிழக மக்கள்.

அப்பேர்பட்ட சகலகலாவல்லவன் வெளியாகி 42 வருசமாச்சுன்னாலும் இம்புட்டு நினைவுகளை மீட்டெடுத்த நாமும் சகலகலாவல்லவன்=தானே🥰😜