மோடி மே 26-ந் தேதி பிரதமராக பதவியேற்கிறார்!
பாஜகவின் நாடாளுமன்றக்குழு தலைவராக மோடி இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மோடி,தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன்.குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு சென்றார்.புது தில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அத்வானி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்தித்தனர்,அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுளள நரேந்திரமோடி, பிரணாப் முகர்ஜியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் அப்போது அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை பிரணாப் முகர்ஜியிடம் ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்த சந்திப்பில் சுஸ்மா சுவராஜ், அருண்ஜெட்லி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர். இதனிடையே மே.26 ஆம் தேதி பிரதமராக வரும் 26 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். நாட்டின் 15வது பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இன்று நடைபெற்ற பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில், மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையொட்டி நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த நரேந்திர மோடி, நாடாளுமன்ற வாயிலில் விழுந்து வணங்கினார்.நாடாளுமன்றத்துக்கு பாஜக தலைவர்கள் புடை சூழ வந்த மோடி, வாயிலை அடைந்ததும், தனது தலை தரையில் படுமாறு விழுந்து வணங்கிய பின்னர் வளாகத்துக்குள் சென்றார்.அப்போது, அவரை வரவேற்க வந்த அத்வானியின் காலிலும் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டார்.

பின்னர் அக்கட்சி உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய பட்டியலுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது அக்கட்சியின் முக்கிய தலைவர்களும் உடனிருந்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 10 கூட்டணி கட்சிகளும் சேர்த்து 335 எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை பிரணாப் முகர்ஜியிடம் ராஜ்நாத் சிங் அளித்தார். மேலும் மோடியை ஆட்சியமைக்க அழைக்கும்படி கோரிக்கை விடுத்தார்.பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே பேட்டியளித்த ராஜ்நாத் சிங், மோடி பதவியேற்பு விழா வரும் 26ந் தேதி நடைபெறும் என தெரிவித்தார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு 3000 பேருக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் ராஜ்நாத் கூறினார். ஜனாதிபதியின் அழைப்பை தொடர்ந்து இன்று பிற்பகல் 3.15 மணிக்கு மோடி, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது மோடியை வரும் 26ந் தேதி பிரதமராக பதவியேற்க வருமாறு அதிகாரப்பூர்வமாக முகர்ஜி அழைப்பு விடுத்தார். இதற்கான கடிதத்தையும் மோடியிடம் முகர்ஜி வழங்கினார். இதன் பின்னர் ஜனாதிபதி மாளிகை முன் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, வரும் 26ந் தேதி மாலை 6.00 மணியளவில் தான் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தெரிவித்தார்.


