தமிழ் குரல் / AI Voice
அமைச்சர் .சு.முத்துசாமியும், அரசு உயர் அதிகாரி திருமதி .அமுதாவும் இணைந்து நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று பார்த்தேன். அமைச்சர் அவருக்கு “குடிமக்கள்” தரப்பிலிருந்து டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை காலை ஏழு மணிக்கு அதிகரிக்க வேண்டும் என்றும் கட்டுமான தொழிலாளர்கள் மது குடிக்க ஏதுவாக அமையும் என தெரிவித்துள்ளார். அமைச்சர் கூறிய கருத்தை அதிகாரி தலை அசைத்து ஆமோதித்தது கண்டு அதிர்ச்சியாக இருந்தது. இரண்டு பிரச்சினைகள் இதில் உண்டு.

டாஸ்மாக் கடைகள் சட்டபூர்வமான நேரம் இருந்த போதிலும் பெரும்பாலான டாஸ்மாக் பார்களும் சட்டத்திற்கு முரணாக எல்லா நேரமும் கூடுதல் விலைக்கு மது விற்று வருகிறது. காலை நேரங்களில் வாகன ஓட்டிகள் கூட மது குடித்து விட்டு வண்டி எடுப்பதை பார்த்து பயப்பட வேண்டி உள்ளது .
கட்டுமான தொழிலாளர்கள் அல்லது எந்த தொழிலாளியும் மது குடித்துவிட்டு வேலையை முறையாக செய்ய இயலுமா? அதை அரசு ஏற்கிறது? தமிழ் நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை இதை ஏற்குமா? போதையில் உள்ள தொழிலாளியால் விபத்து நடக்காதா?
அதிகாரி அமுதா இ.ஆ.ப தொழிலாளர் நலத்துறை இயக்குனராக பணியாற்றியவர். அமைச்சருக்கு சட்டம் தெரியாது, ஆனால் திருமதி அமுதாவுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். பணியாளர் இழப்பீடு சட்டம் பிரிவு 3 (1)கீழ் பணிக்காலத்தில் மது போதையில் இருந்த விபத்துக்கு உள்ளான தொழிலாளி இழப்பீடு பெற அருகதை அற்றவர்.
டாஸ்மாக்கை மூட வேண்டும் அல்லது பழைய நேரத்தை கடைபிடிக்க வேண்டும். காலை ஏழு மணிக்கு வேலைக்கு போகும் தொழிலாளிக்காக திறந்தால் பணியின் போது போதையில் இருந்தாலும் இழப்பீடு உண்டு என சட்டத்தை மாற்றவேண்டும். அமுதா போன்ற அதிகாரிகள் அமைச்சருக்கு அறிவுரை கூற வேண்டும்,தலையாட்டி பொம்மைகளாக இருக்க கூடாது.
Section 3 (1) of the EC Act 1923 states that the employer shall not be liable for any accident
(i) the workman having been at the time thereof under the influence of drink or drugs,
