32°C
விளம்பரம்
Advertisement

பெண்களின் உடல் – ஆபாசம் வேறு : நிர்வாணம் வேறு= கேரளா ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

admin சேலம் Published: June 6, 2023 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



தற்போதய சூழல்களில் ஆடைகள், நிர்வாணம் மற்றும் ஆபாசம் குறித்த பல சர்ச்சைக்குரிய கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன. அதாவது, பெண்கள் ஆடை அணிவதில் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள், முன்பிலிருந்தே இருந்து வருகின்றது. நிர்வாணம் எப்பொழுது ஆபாசமாக மாறுகிறது என்பதில் பலருக்கும் பல கருத்துக்கண்ணோட்டம் உள்ளது. 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில், திருவிதாங்கூர் சமஸ்தானம், சேர்த்தலை என்னும் பகுதியில் வாழ்ந்த நங்கேலி என்னும் பெண், அவர் சாதியின் அடிப்படையில் அக்காலத்தில் விதிக்கப்பட்டிருந்த முலைவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினர். நங்கேலி தனது மார்பகங்களை வெட்டி, வரி வசூலிக்க வந்த அதிகாரியிடம் கொடுத்தார். அவரின், வீரச் செயலை முன்னிறுத்தி மக்கள் இயக்கங்கள் தொடங்கப்பட்டு அந்த வரி வசூலிப்பதற்கு எதிர்ப்புகள் எழும்பின. இதன் பின்னணி என்னவென்றால், தனது உடல் சார்ந்த முடிவுகளை எடுப்பது தனது உரிமையாகும் என்பதே.

இந்த வகையில், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரிஹானா பாத்திமா, தனது மேலாடையற்ற உடலில், தனது குழந்தைகள் ஓவியம் வரைவதை, காணொளியாக பதிவு செய்து, அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த காணொளி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரிஹானாவின் இச்செயலை பலரும் எதிர்த்தனர். அவர் போக்குக்கு கடும் எதிர்ப்புகள் நிலவியது. இவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொச்சி காவல்துறை இவர் மீது போக்சோ சட்டம், சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் கவுசர் எடப்பகத் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். ’ பெண்களின் அரை நிர்வாண உடலை ஆபாசமாக பார்க்க கூடாது. பெண்களின் நிர்வாண உடல், பாலியல் உணர்வை தூண்டுவதாக கருதப்படுவது தவறு என்று” அவர் கூறினார்.

”சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் சில மக்களின் மனம் பாதிக்கப்படுவதால், ஒருவரை நாம் குற்றம்சாட்ட முடியாது. சமூக கட்டமைப்பில் தவறு என்று கருதப்படுவது, சட்டரீதியாக தவறாக இருக்க வேண்டும் என்பதில்லை” என்றும் அவர் கூறினார்.

” சிக்ஸ் பாக் மற்றும் ஆண்களின் மேல் பகுதி உடலை எல்லோரும் எளிதாக கடந்து சென்றுவிடுகின்றனர். அது ஒரு விவாதமாக மாறுவதில்லை. இதுபோலத்தானே பெண்களின் மேல் பகுதி உடலை பார்க்க வேண்டும். சமூகத்தில் நிலவும் இந்த இரட்டை மனநிலையை கேள்வி கேட்கும் நோக்கத்தில்தான், சமந்தபட்ட பெண் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்