அதிமுக & பாஜக கூட்டணி உடையும்.. ஆனா உடையாது!?

அதிமுக & பாஜக கூட்டணி உடையும்.. ஆனா உடையாது!?

பாஜக, அதிமுக கூட்டணி உடைகிறதா? ஆம், ஆனால் இல்லை! என்னடா பைத்தியக்கரத்தனமான பதில் என்று நினைக்கிறீர்களா? இந்த பதிவை படித்தபின் உங்களுக்கு இது சரி என்றே தோன்றும்.

சமீபத்தில் பாண்டேவின், சாணக்யாவும், அவரின் Pandey School of Journalism என்பதும் இணைந்த நடத்திய கருத்து கணிப்பில் சில பட்டவர்த்தனமன உண்மைகள் வெளிவந்துள்ளது. அவை என்ன?

திராவிட கட்சிகளின் மீது ஒரு பெரிய வெறுப்புணர்வு தமிழக மக்களிடம் தோன்றியுள்ளது. அது திமுகவை பாதித்தைவிட, அதிமுகவை அதிகமாக பாதித்துள்ளது. பாஜகவிற்கு ஏற்கனவே 8% வாக்குகள் இருந்தன, ஆனால் அவை திமுகவை தோற்கடிக்க அதிமுகவின் பக்கமே சாய்ந்தது. இன்று அது உயர்ந்து கிட்டத்தட்ட 15% வாக்குகளை தற்போது தனதாக்கியுள்ளது. அதில் கிட்டத்தட்ட 7% ஓட்டிழப்பு என்பது அதிமுகவிற்கே நடந்துள்ளது. அதாவது 28% ஆக இருந்த அதிமுக ஓட்டு 21% ஆக குறைந்துள்ளது.

இதுவரையில் பாஜகவின் ஓட்டை தனக்கு சாதகமாக மாற்ற முடியாத ஒரு சூழலில் அந்த ஓட்டுக்கள் இரு திராவிட கட்சிகளுக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறி மாறி விழுந்தது. மேலும் மற்ற கட்சிகள் எதிர் ஓட்டுக்களை பிரிக்கும்போது, அது ஏதோ ஒரு கடைசிக்கு அது சாதகமாக அமைந்தது. ஆனால் இன்று அண்ணாமலைக்கு பின்பு அதை தனதாக்கும் பாஜகவின் முயற்சியில், அது ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டுமல்ல, அது மற்ற கட்சிகளின் ஓட்டையும் தனதாக்க தொடங்கிவிட்டது.

இது அதிமுகவைத்தான் பாதிக்கும் என்று திமுக தன் பாணியில் இருந்து மாற வேண்டிய சூழல் இல்லாதபோது, அதிமுக மாறியே ஆக வேண்டிய கட்டாய சூழல் அதற்கு ஏற்பட்டுவிட்டது … அது மாறாவிட்டால், அதன் வாக்கு வங்கியாக பிஹார், மகா போல இங்கும் பாஜகவின் வாக்கு வங்கியாக மாறிவிடும். அதை மேலும் எளிதாக்க, சசிகலா பாஜகவில் விரைவில் இணைக்கப்படலாம். அதை உணர்ந்த அதிமுகவின் புத்ய வியூகங்களை உங்களுக்கு கொடுப்பதே இந்த பதிவின் நோக்கம்.

இங்கே இரண்டு முரண்பட்ட விஷயங்கள் ஆரம்பமாகிவிட்டது. ஒன்று பாஜகவிற்கு கிடைக்கும் மிகப் பெரிய வரவேற்பும் ஆதரவும் அதற்கு சாதகம் என்று சொல்லும்போது, அது அதிமுக, பாமக, தேமுதிக மட்டுமல்ல ஒரு சிறு பங்கு திமுக, விசிகவிற்கும் அது இழப்பாக மாறி இருக்கிறது. கூட்டணியில் இருக்கும்போது பாஜகவை இந்த கட்சிகளால் எதிர்க்க முடியவில்லை. அப்போது பாஜக என்ற கூட்டணி கட்சி மீது அதன் தொண்டர்களுக்கு ஒரு நட்புணர்வு ஏற்படுகிறது. அப்போது பாஜக செய்த நல்ல விஷயங்கள் கண்களுக்கு தெரிகிறது.

அதே சமயம், பாஜக திமுகவை பலமாக எதிர்ப்பதில் அவர்களின் ஆழமான உணர்வோடு ஒன்றிணைகிறது. அப்போது அதிமுக எதற்கு? பாஜகவும், அதன் கடுமையான உழைப்பாலும், நல்ல செயல்களால மக்களை ஈர்க்கும்போதில், இதுவரை கட்டமைத்து வந்த திராவிடம் என்ற மாயையை உடைப்பதால், அது திமுகவிற்கு மட்டுமல்ல, கொள்கை ரீதியில் அதை நம்பும் அதிமுகவிற்கும் ஆபத்தாக்கிறது. அப்போது சிலர் அதன் லட்சியங்களாலும், எதிர்கால ஆட்சிக்கான வாய்ப்பால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்கிறார்கள்.

அப்படியானால் பாஜகவினை அருகில் வைத்திருப்பது ஆபத்தானது மட்டுமல்ல தற்கொலைக்கு சமமானது என்பதால், அதன்மீது ஒரு எதிர்ப்புணர்வை தன் கட்சிக்காரர்களுக்கு விதைக்க வேண்டிய கட்டாய சூழலில் திமுக போலவே, அதிமுகவும் உள்ளது. அது எடப்பாடிக்கு தெரிந்தது மட்டுமல்ல, அவருடைய முழு ஆதரவும் இதற்குண்டு.ஆனால் பாஜக ஆதரவு இல்லாமல் இனிமேல் தமிழகத்தில் அதிமுகவால் தனது மைனாரிட்டி ஓட்டுகளை இழந்தபின் ஆட்சி அமைக்க முடியாது என்பது கள நிலவரம். எனவே தேர்தல் வரும்வரை இந்த எதிர்ப்புணர்வை தூண்டிவிட்டு தன் தொண்டர்கள் விலகாமல் பார்த்துக்கொண்டு, தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ளவே விரும்புகிறது.

அதில் அதிமுகவிற்கு உள்ள லாபம் என்னவெனில் பாஜக ஓட்டுக்கள், திமுகவை தோற்கடிக்க அதற்கு கிடைக்கும். ஆனால் பாஜக மீது விதைக்கப்படும் எதிர்ப்புணர்வால், அந்த கட்சியின் ஓட்டுக்கள், பாஜகவிற்கு ஒரு பங்கு போனாலும், பாஜகவின் மீதுள்ள வெறுப்பால் அதன் மற்றொரு பங்கு அதை தோற்கடிக்க திமுகவிற்கு போகும். அதன் மூலம் பாஜகவின் வளர்ச்சியை தமிழகத்தில் தடுக்க முடியாவிட்டாலும், அதை தள்ளிப்போட முயலும்.

இதற்கு திமுகவின் மறைமுக ஆதரவும் உண்டு. எனவே அது ஆட்சிக்கு வர தேவையான ஓட்டுக்களும் கிடைக்கும், பாஜகவையும் கட்டுப்படுத்தலாம் என்று திராவிட லாபிகள் அதிமுக, திமுகவை இணைக்கும் தேசியத்திற்கு எதிரான சிந்தனையாளர்கள் அறிவுருத்துகிறர்களாம். அண்ணாதிமுக திமுகவின் அவரை எதிர்த்து போராடததால், அதை பாஜக எடுத்து செய்கிறது. அதற்கு காரணம், திமுக தான் செய்த ஊழலின்மீது வழக்கு தொடுக்கும் என்ற பயத்தில். இனிமேல் திமுக அரசு அதை செய்யாது என்ற உறுதியும் அதிமுகவிற்கு கொடுத்து, அதன் மூலம் பாஜகவின் போராட்டத்தை பிசிபிசுக்க வைப்பதே இதன் நோக்கம். எனவே வெளியே கூட்டணி இருந்தாலும், திரைமறைவில் தமிழக களத்தில், பாஜக vs திராவிட கட்சிகள் என்ற நிலைப்பாடு ஏற்பட்டு விட்டது.

இதை பாஜக எப்படி முறியடித்து தன்னை வளர்த்துக்கொள்ள போகிறது என்பது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

மரு. தெய்வசிகாமணி

error: Content is protected !!