அமர் ஜவான் ஜோதியை அணைச்சுப் புட்டது மோடி அரசு- அதிருப்தி அலைகள்!

அமர் ஜவான் ஜோதியை அணைச்சுப் புட்டது மோடி அரசு- அதிருப்தி அலைகள்!

து சீனியர் போட்டோ ஜர்னலிஸ்ட் விஸ்வநாதன் பகிர்வு

அமர் ஜவான் ஜோதி 1971ல் நடந்த பங்களாதேஷ் விடுதலை போரில் உயிர் தியாகம் செய்த 3843 ராணுவ வீரர்களின் நினைவாக இந்தியா கேட்டில் இந்திரா காந்தி காலத்தில் அமைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து பல யுத்தங்களிலும் ஊடுருவல்களை எதிர்து போரிட்டதிலும் உயிர் தியாகம் செய்தவர்களின் 26466 போர்வீரர்களின் பெயர்கள் சுவற்றில் பொரிக்கப்பட்ட நினைவு சின்னம் உள்ளது. அந்த இடத்திற்கு இப்பொழுது அமர் ஜவான் ஜோதி மாற்றப்பட்டுள்ளது. இது உலக வரலாறு படைத்த ஒரு போரில் உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு சின்னம்.உலக வரைபடத்தில் “பங்களாதேஷ்” என்ற நாடு இருக்கும் வரை இந்திரா காந்தியின். பெயரும் இருக்கும். எந்த ஜனநாயக நாட்டிலும் வரலாற்று சின்னங்களை மறைப்பதோ அழிப்பதோ கிடையாது.

அதாவது கடந்த 1971ம் ஆண்டு நடந்த போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக 1972ம் ஆண்டு குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் உள்ள ‘இந்தியா கேட்’ பகுதியில் அமர்ஜவான் ஜோதி எனப்படும் அணையா விளக்கு ஏற்றப்பட்டது. இந்தியா கேட் என்பது பிரிட்டிஷ் அரசு மூலம் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்கள் 1914-1921 இடையிலான முதல் உலகப்போரில் வீர மரணம் அடைந்ததன் நினைவாக இது கட்டப்பட்டது. இங்குதான் இந்திய அரசு மூலம் அமர் ஜவான் ஜோதி என்ற நினைவு ஜோதி கட்டப்பட்டது. வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக கடந்த 50 வருடமாக இந்த தீ பந்தம் விடாமல் எரிந்து கொண்டு இருக்கிறது.

இந்த அமர் ஜவான் ஜோதி மற்றும் நினைவிடத்தில் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தின் போது இந்திய பிரதமர் மரியாதை செலுத்துவது வழக்கம். இதற்கிடையே கடந்த 2019ம் ஆண்டு ெடல்லியில் தேசிய போர் நினைவகம் திறக்கப்பட்டது. இந்நிலையில் அமர்ஜவான் ஜோதியை தேசிய போர் நினைவகத்திற்கு இன்று இடமாற்றம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘போர் வீரர்களுக்காக ஏற்றப்பட்ட அமர்ஜவான் ஜோதி இன்று அணைக்கப்படுவது வருத்தம் அளிக்கின்றது. சிலரால் தேசப்பற்றையும் தியாகத்தையும் புரிந்து கொள்ள முடியாது. நமது வீரர்களுக்காக மீண்டும் அமர்ஜவான் ஜோதியை ஏற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அது போல் நம்ம ஆந்தை நண்பர் விஸ்வநாதன் உள்பட பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்

error: Content is protected !!