உதயநிதி போலீஸ் ஆபீசராக நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ டப்பிங் ஆரம்பிச்சாச்சு!

உதயநிதி போலீஸ் ஆபீசராக நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ டப்பிங் ஆரம்பிச்சாச்சு!

கோலிவுட்டில், ஒரு புரொடீயூசராக காலடி வைத்து, விநியோகஸ்தர், நடிகர், அரசியல்வாதி என ஏகப்பட்ட அவதாரங்களோடு உலா வரும் உதயநிதி ஸ்டாலின். தன்னுடைய தாத்தாவின் டைட்டிலான நெஞ்சுக்கு நீதி என்பதை செல்கட் செய்து நடித்து வருவதால், இது தான் அவரது கடைசி படமா என்றும், இப்படத்திற்கு பின் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்துவாரா என்கிற நீயா நானா டிபேட் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் செல்ல பிள்ளையான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் அப்படீன்னு.. தற்போதைய திமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அடுத்தடுத்து தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருவது தான், விரைவில் சினிமா நடிப்புக்கு உதயநிதி முற்றுப்புள்ளி வைப்பாரா? என்கிற சந்தேகத்திற்கு இடம் கொடுத்திருக்குது. அதே சமயம் தற்போது உதயநிதி அடுத்தடுத்து சுமார் 4 படங்களில் கமிட் ஆகி நடிச்சிகிட்டே இருக்கிறார். அந்த வகையில், இயக்குனர் மு.மாறன் யக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’, அருண் ராஜ் காமராஜ் இயக்கத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ , மற்றும் மகிழ் திருமேனி இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படம் ஆகியவற்றில் நடிச்சு வாரார்.

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி டைரக்டர் அருண் காமராஜை நம்ம கட்டிங் கண்ணையா காண்டாக்ட் செய்து பேசிய போது அவர் ஷேர் செய்த சமாச்சாரங்கள் நம்ம ஆந்தை சினிமா அப்டேட்ஸ் ப்ரண்டஸ் பார்வைக்கு இதோ:

“இது அநீதிக்கு எதிரான நீதியின் குரல். அநீதி என்பது எங்கே, எப்படி வேண்டுமானாலும் எந்த வடிவத்திலும் நடந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு நிறைய முகங்கள் உண்டு. அதற்குப் பின்புலங்கள் உள்ளன. ஒவ்வொரு இடத்திலும் சரியான இடத்தில் ஆட்கள் இருந்து கொண்டு தவறான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி பின்புலங்களை எதிர்த்து வருகிற நீதியின் குரல் என்னவாக, எப்படிப்பட்டதாக இருக்கும் எனும் கேள்வி பலருக்கு எழும் இல்லையா?. அதற்கான பதில்தான் ‘நெஞ்சுக்கு நீதி’.இங்கே எல்லாவற்றுக்கும் சட்டப்படியான தீர்வு இருக்குது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதற்கு என்னென்ன சிரமங்களை, சவால்களை எதிர் கொள் இருக்கும் என்பதை அலசி இருக்கோம்,

பெரிய எடத்து பிள்ளையான உதயநிதி இயக்குநரின் விருப்பத்தை அறிஞ்சிகிட்டு அதற்கேற்ப செயல்படுகிறார் இந்த கொரோனா தொற்றில் என்னோட ஒய்ஃப் இறந்து போனப்போ ரொமப் ஆறுதலா இருந்தார். நோய் சூழலில் சொந்தங்கள் கூட என்னை நெருங்க முடியாம இருந்தபோது, இந்த உதயா நேரில் வந்து நலம் விசாரிச்சா. இதையெல்லாம் மதிப்பிடவே முடியாது. அப்பாலே எனக்கு கொரோனா தொற்று வந்தபோதும், அதிலிருந்தும் என்னை மீட்டுக்கொண்டு வந்ததில் அவருக்கு முக்கியப் பங்குண்டு.. ஒரு வகையில் உதயநிதி அருகாமை என் பாக்யமென்றெ சொல்வேன். ஆர்ட்டிக்கிள் 15’ படத்தில் அரசியலும் திகிலும் அதிகமா இருக்கும் அப்படீனு நெனச்சவங்க இந்த‘நெஞ்­சுக்கு நீதி’யில் அரசியல் நெடி அதிகமா இருக்குதே அப்படீனு சொல்வாய்ங்க.

 

உதயநிதி முதன் முறையாக போலீஸ் ஆபீசரா நடிச்சிருக்கார். அவர் கமிட் ஆகி நடிச்சது பத்தி நிறைய சொல்லலாம் . இன்னிக்கு வெளிப்படையாக அரசியல் பேசும் படங்கள் தமிழில் வரத்தொடங்கிவிட்டன. அந்த வகையில் ‘நெஞ்சுக்கு நீதி’யும் முக்கியமான அரசியல் படமாக இருக்கும். எனக்கும் உதய்க்கும் ஒரு நல்ல படத்தை உருவாக்கிய மனநிறைவு உள்ளது. மக்களுக்கும் அந்த மனநிறைவு ஏற்பட்டால் இது ஒரு வெற்றிப்படமாக மாறும்,” அப்படீன்னு சொன்னார் அருண் ராஜா காமராஜ்.

அப்பேர்ப்பட்ட படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்னிக்கு தொடங்கிடுச்சு, உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக இன்னிக்கு வந்து டப்பிங் கொடுத்தார்.

விரைவில் ரிலீஸாகப் போகும் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

error: Content is protected !!