ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..மெண்டலா நீங்க? – சீனா & பாக்.க்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..மெண்டலா நீங்க? – சீனா & பாக்.க்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

மது நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க எந்த நாடாவது முயன்றால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். 1971-ல் நடந்த போரில் இந்தியா பெற்ற வெற்றி அனைவருக்கும் நினைவிருக்கும். எனவே அண்டை நாடுகள் மனபிரம்மையுடன் வாழ வேண்டாம் என்று நம் கடற்படையின் பலத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில், ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாத, எதிரியை அழிக்கும் ஏவுகணைகள் உடைய ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் என்ற போர்க் கப்பலை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த போது எச்சரிக்கை விடுத்தார்.

இந்திய கடற்படைக்கு வலு சேர்க்கும் வகையில் நவீன கருவிகள், வசதிகள் உள்ள போர்க் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. கடற்படை வடிவமைப்பு இயக்குனரகம் வடிவமைத்துள்ள இந்த கப்பலை மகராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மசாகோன் நிறுவனம் கட்டுமானம் செய்துள்ளது. எதிரிகளின் ரேடார்களில் சிக்காத, எதிரிகளை அழிக்கும் ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் இந்த போர்க் கப்பல், 7,400 டன் எடையுள்ளது. மொத்தம் 163 மீ. நீளமுள்ள இந்த கப்பல், 30 கடல் மைல் வேகத்தில் இயங்கக் கூடியது. இதில் உள்ள கருவிகள், ஆயுதங்கள் என 75 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் போர்க் கப்பல், நம் கடற்படைக்கு கூடுதல் வலிமையை தரும்.

மும்பையில் நடந்த விழாவில் இந்த கப்பலை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதை தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியது,

ராணுவ வீரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. முப்படைகளில் ஓய்வூதியத்தை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற சீரமைப்பை மேற்கொள்வதற்கு மத்திய அரசுக்கு அரசியல் பலம் உள்ளது.

அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதையே இந்தியா விரும்புகிறது. இந்தியா எப்போதும் எந்த நாட்டையும் தாக்கியது இல்லை. அந்நிய மண்ணை நாம் ஆக்கிரமிப்பதும் இல்லை. ஆனால் சிலர் இதை புரிந்து கொள்வதில்லை. இது அவர்களது வழக்கமா அல்லது குணாசயமா? என்று தெரியவில்லை. பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பாகிஸ்தான் அத்துமீறினால் எல்லையில் பதிலடி தருவது மட்டுமல்ல அதன் நிலப்பரப்புக்குள் சென்றும் வான்வழி தாக்கு தலை நடத்துவோம் என்று தெளிவான தகவலை நாம் கொடுத்திருக்கிறோம்.

மற்றொரு அண்டை நாடும் சீனா வி‌ஷயங்களை புரிந்து கொள்வதில்லை. நமது நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க எந்த நாடாவது முயன்றால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். 1971-ல் நடந்த போரில் இந்தியா பெற்ற வெற்றி அனைவருக்கும் நினைவிருக்கும். எனவே அண்டை நாடுகள் மனபிரம்மையுடன் வாழ வேண்டாம்.

லிபுலேக் கனவாய் முதல் மானசரோவர் வரை செல்லும் சாலையை நான் சமீபத்தில் திறந்து வைத்தேன். இது தொடர்பாக நேபாளத்தில் தவறான புரிதலை ஏற்படுத்த முயற்சி நடந்தது. ஆனாலும் அந்த நாட்டுடன் ஆன நமது நெருங்கிய கலாச்சார உறவுகளை அதனால் பாதிக்க செய்ய முடியவில்லை.

டேராடூனில் ராணுவ நினைவை போற்றும் வகையில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இது பிரதமரின் கனவு திட்டம் ஆகும். அந்த நினைவகத்தில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் பெயர்களும் அவர்களது கிராமத்தின் பெயரும் கல்வெட்டாக பொறிக்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும்.” என்றார்

error: Content is protected !!