நாடாளுமன்றத்தை நோக்கி 500 விவசாயிகள் டிராக்டர் பேரணி!

நாடாளுமன்றத்தை நோக்கி 500 விவசாயிகள் டிராக்டர் பேரணி!

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தின் ஓராண்டு நினைவாக நவம்பர் 29-ம் தேதி முதல் நாடாளுமன்றத்தை நோக்கி 500 விவசாயிகள் தினந்தோறும் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்வதையொட்டி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது தினமும் நாடளுமன்றத்துக்கு பேரணி நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக டெல்லி அரியானா எல்லையில் உள்ள சிங்கூவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத் தலைவர்கள், நவம்பர் 29 ம் தேதி முதல் 500 விவசாயிகள் தினமும் நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர்களில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் கட்டுப்பாட்டுடன் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

போலீசார் டிராகடர் பேரணியை தடுத்தால் அந்த இடத்திலேயே தரையில் உட்கார்ந்து விடும்படி விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் , ராஜஸ்தான் உத்தரகாண்ட் கஎநாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் விவசாயிகள் பெரும்திரளாக திரண்டு போராட்டத்தை வலுப்படுத்த இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Posts