கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியாகிடுச்சு!

கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியாகிடுச்சு!

மிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில்  31.03.2021 வரை  5 சவரன்களுக்கு உட்பட்டு பெறப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது, , இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது,

தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் நகைக்கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, கடந்த 2021 மார்ச் 31 ம்தேதி வரை பெற்ற 6,000 கோடி ரூபாய் நகைக்கடன்கள் தள்ளுபடியாகும், மேலும் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள வட்டி மற்றும் அபராத வட்டியும் தள்ளுபடியாகும் என்று தமிழக அரசு வெளியான அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது,

மேலும் அப்பட்டமான நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட அனைத்து நபர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான பட்டியலில் கண்டுள்ள நகைக்கடன்களை அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

நகைக்கடன் குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணை நகல்  இதோ.

error: Content is protected !!