ஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே!

ஆன் லைனில் ஆர்டர் செய்யும் ஹோட்டல் உணவு விலை உயரப் போகுதாமில்லே!

மோடி தலைமையிலான ஆட்சி நடக்கும் நம் நாட்டில் உணவுப் பொருட்களுக்கு ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களை ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இதுசம்பந்தமான முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி உள்ளது. ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களும் இணையதள வர்த்தக ரீதியில்தான் இந்தப் பணிகளைச் செய்து வருகின்றனர். எனவே அதன் அடிப்படையில் இந்த நிறுவனங்களையும் ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி வரிமுறை உள்ளது. ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களும் இணையதள வர்த்தக ரீதியாகத்தான் இந்த பணிகளை செய்கின்றன.ஏற்கெனவே ஓட்டல்களில் வாங்கும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. அதனை விநியோகம் என்ற சேவையை வழங்கும் நிறுவனங்கள் என்பதால் அதற்கு வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் அந்த நிறுவனங்கள் சேவை என்ற கணக்கில் வரும் என்பதால் அதற்கு வரி வசூலிக்க மத்திய நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

பெரும்பாலான நடுத்தர ஓட்டல்கள் இந்த வரிகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிவிட்டு அவற்றை அரசுக்கு முறையாக கட்டுவது இல்லை.2020- 2021 நிதியாண்டில் மட்டும் ஓட்டல்கள் இந்த வகையில் ரூ.2 ஆயிரம் கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்விக்கி, ஸோமேட்டோ மூலம் விற்பனை செய்யப்பட்டதாக கூறி மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.எனவே ஓட்டல்களில் முறையாக வரி வசூல் செய்வதற்கு ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்களையும் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

ஒருவேளை ஜி.எஸ்.டி வரம்புக்குள் உணவு டெலிவரி நிறுவனங்களையும் கொண்டுவந்துவிட்டால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயருவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் விற்பனையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரவும் ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், இதுகுறித்தும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!