கெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு!

கெளதம் மேனன் பண மோசடி வழக்கில் அரெஸ்ட் ஆக வாய்ப்பு!

கோலிவுட்டில் பிரபலமான டைரக்டர் கெளதம் மேனன் குறித்து ஏதாவது  போலீஸ் புகார் வந்துருக்கோ?ன்னு விசாரிக்க போன கட்டிங் கண்ணையா அனுப்பியிருக்கும் ஃபாலோ அப் ரிப்போர்ட்:  நம்ம தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகள் ரெண்டு பேர் இன்னிக்கு நண் பகல் 12 மணி வாக்கிலே சென்னை போலீஸ் கமிசனர் ஆபீஸ் வந்து கெளதம் மேனன் ஒரு பார்ட்டியிடம் ‘சூப்பர் ஸ்டார்’ங்கற டைட்டிலில் ஒரு படம் எடுத்து தர்றதாவும் அதுக்கு சம்பளமா எட்டு கோடி ரூபா பேசி முடிச்சு அட்வான்ஸா 2 கோடியே 85 லட்ச ரூபாய் வாங்கி இருந்ததாவும், ஆனா மூனு வருசமா படம் எடுக்க முன் வராம வாங்கின தொகையையும் திருப்பி தராம ஏமாத்திக்கிட்டு இருக்காரே.. இது குறிச்சு க்ரைம் புகார் கொடுக்க வழி என்ன அப்படீன்னு விசாரிச்சாய்ங்களாம்.

அப்போ இவிய்ங்க பார்த்த டெபுடி கமிஷனர், ‘இந்த மாதிரி புகார்களை உங்க புரொடியூசர் கவுன்சிலே பேசி தீர்க்கறதுதானே வயக்கம்.. இப்ப என்ன புதுசா போலீஸ் வரைக்கும் கப்ளையண்ட் கொடுக்க கன்சல்ட் பண்றீங்க?’ன்னு கேட்டாராம்

அதுக்கு இந்த சங்க ரெப்-ங்க, ‘இந்த கெளதம் மேனன் ஏகப்பட்ட பேர்கிட்டே பேமண்ட் வாங்கிட்டு மதுரை எய்ம்ஸ் செங்கலை காம்பிச்சிட்டு போயிகிட்டே இருக்கறது வாடிக்கை.. இப்ப இந்த சூப்பர் ஸ்டார் படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்த புரொடியூசருக்கு ஆதரவா கொஞ்சம் சவுன்ட் விட யாருமில்லாததால் போலீஸ் ஹெல்பை அப்ரோச் பண்ணச் சொல்லி மேலிட உத்தரவு,, அதான் விசாரிக்க வந்தோ’ என்றார்களாம்..

இதை அடுத்து அந்த டெபுடி கமிசனர் கெளதம் மேனனுடன் போட்ட அக்ரிமெண்ட்-டை வாங்கிப் படித்து விட்டு, ’அட.. இந்த படம் எடுத்து முடிக்காம வேற படம் டைரக்ட் செய்ய மாட்டேன் எழுதிக் கொடுத்து சைன் போட்டிருக்கார்.. ஆனா இப்போ ஏதோ படமெடுத்துக்கிட்டிருக்காரில்லே’ என்றதற்கு ‘ஆமாங்கய்யா.. வேல்ஸ் பிலிம்சுக்காக சிம்புவை வச்சு ஷூட் பண்ணிக்கிட்டிருக்கார்’ அப்படீன்னு சொன்னதை கேட்டு கடுப்பான டெபுடி கம்ஸ் ‘இப்போதைக்கு இது நம்பிக்கை மோசடி ஏமாற்றுதல் ,பண மோசடி அது இது என நாலைந்து கிரிமினல் செக்சனில் ரிஜிஸ்டர் பண்ண போதுமான டாகுமெண்ட் இருக்குது.. ஆனா பொருளாதார குற்றப்பிரிவில்தான் புகார் கொடுக்க வேண்டியதிருக்கும் இது விசயமா எங்க லா செக்சனில் விசாரிக்கிறேன்.. நீங்க நெக்ஸ்ட் வீக வாங்க.. நான் க்ளியரா சொல்றேன்.. அதுக்கிடையிலே ஏதும் டவுட் இருந்தா கால் பண்ணுங்க’ன்னு சொல்லி தன் நம்பரைக் கொடுத்துள்ளாராம்

ஆக.. கோலிவுட் வரலாற்றில் முதல் முறையாக பண மோசடி வழக்கில் கெளதம் மேனன் அரெஸ்ட் ஆக வாய்ப்பு அதிகமா இருக்குது..

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!