80 ஆண்டுகால திரைப்பாரம்பரியம்:பிரம்மாண்ட ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ தொடக்கம்!

80 ஆண்டுகால திரைப்பாரம்பரியம்:பிரம்மாண்ட ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ தொடக்கம்!

ந்தியத் திரை உலகில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சகாப்தமாகத் திகழும் ஏவிஎம் (AVM) நிறுவனம், தனது அடுத்த மைல்கல்லாகப் பன்முக வசதிகள் கொண்ட பிரம்மாண்ட ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ (AVM Convention Centre) அரங்கத்தை உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் தொடங்கியுள்ளது.

ஆறு முதலமைச்சர்களைத் தந்த ஆளுமை

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி, சிங்களம் என 6 மொழிகளில் 179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்து இந்திய சினிமாவின் முன்னோடியாக விளங்கும் நிறுவனம் ஏவிஎம். திரைத்துறை தாண்டி, இந்தியாவின் 6 மாபெரும் முதலமைச்சர்கள் ஏவிஎம் நிறுவனப் படங்களில் பணியாற்றியுள்ளனர் என்பது இதன் தனிச்சிறப்பு.

அறிஞர் அண்ணாதுரை (ஓர் இரவு – 1951), கலைஞர் மு. கருணாநிதி (பராசக்தி – 1952), எம்.ஜி.ராமச்சந்திரன் (அன்பே வா – 1966), என்.டி. ராமாராவ் (5 படங்கள்), ஜெ. ஜெயலலிதா (4 படங்கள்) மற்றும் சி. ஜோசப் விஜய் (வேட்டைக்காரன் – 2009) ஆகியோர் ஏவிஎம்முடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்கள்.

தொழில்நுட்பப் புரட்சியின் முகவரி

சினிமாவில் எத்தனையோ புதுமைகளை ஏவிஎம் நிறுவனம் முதன்முதலாக நிகழ்த்திக் காட்டியுள்ளது:

  • ‘நந்தகுமார்’ (1938) – முதல் பின்னணிப் பாடல் முறை.

  • ‘ஹரிச்சந்திரா’ (1944) – முதல் டப்பிங் படம்.

  • ‘நாம் இருவர்’ (1947) – மகாகவி பாரதியாரின் பாடல்களை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி, பின்னாளில் அதை அரசுக்கே நன்கொடையாக வழங்கிய ஏவி.மெய்யப்பனின் பெருந்தன்மை.

  • ‘அந்த நாள்’ (1954) – பாடல்களே இல்லாத முதல் படம்.

  • ‘சம்சாரம் அது மின்சாரம்’ (1986) – ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் வென்ற முதல் பொழுதுபோக்குத் தமிழ்ப்படம்.

  • ‘ராஜா சின்ன ரோஜா’ (1989) – லைவ் ஆக்‌ஷனையும் அனிமேஷனையும் இணைத்த முதல் இந்தியத் திரைப்படம்.

  • ‘சிவாஜி 3D’ (2012) – இந்தியாவின் முதல் ‘Dolby Atmos’ தொழில்நுட்பப் படம்.

திரைத்துறையின் இந்த உன்னத வரலாற்றைப் போற்றும் விதமாக, பழங்காலக் கார்கள் மற்றும் அரிய சினிமா உபகரணங்களுடன் “ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்” கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

அனைத்துத் தேவைகளுக்கும் ஒரே அரங்கம்: ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்

தற்போது ஏவிஎம் நிறுவனத்தின் புதிய வரவாகத் தொடங்கப்பட்டுள்ள ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’, சென்னையில் மிக முக்கிய நிகழ்வுகளை நடத்துவதற்கான ஆகச்சிறந்த இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொருட்காட்சிகள், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் கூட்டங்கள், திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள், திருமணங்கள் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் என அத்தனைக்கும் ஏற்ற வகையில் பிரம்மாண்ட மேடை மற்றும் பரந்த பார்க்கிங் வசதியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மற்ற பெருநகர அரங்குகளில் இல்லாத ஒரு சிறப்பம்சமாக, அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் சைவ மற்றும் அசைவ உணவு சமைப்பதற்கெனத் தனித்தனியான சமையலறை வசதிகள் இந்த அரங்கில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரியமும் நவீனத்துவமும் இணைந்த இந்த அரங்கம், இனி சென்னையின் முக்கிய விழா வார்ப்புகளின் மையப்புள்ளியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

Related Posts