8 மாதம் ::: 1,121 பாலியல் வழக்கு – இந்திய தலைநகர சாதனைப் பட்டியல்!

8 மாதம் ::: 1,121 பாலியல் வழக்கு – இந்திய தலைநகர சாதனைப் பட்டியல்!

தலைநகர் புதுடில்லியில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார்ஆயிரத்து 120 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு 468 ஆக இருந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2008 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வருவதாகவும் தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.
sep 12 - delhi police
இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக அளவு, பெண்களுக்கு எதிரான பாலியல்‌ வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குப்பதிவு 468 ஆக இருந்தது.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்கள், நீதி வேண்டி துணிவுடன் காவல்நிலையத்தை தேடி வருவதையே இந்த குற்றப்பதிவு அறிக்கை காட்டுவதாகவும் டெல்லி போலீசாரால் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 80 சதவீத குற்றவாளிகள் கைது செய்யப்படுவதாக” அவர்கள் கூறுகின்றனர். மேலும் டெல்லியில் கடந்தாண்டு டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

Delhi records 1,121 rape cases in 8 months, highest in 13 years
********************************************************************************
A whopping 1,121 rape cases were registered in the city in the first eight months of this year, the highest in the last 13 years.Police see this rise in the number of cases as a good sign, saying that more cases are now being reported which was not the case earlier and a number of efforts have been taken to ensure women safety in the city after the last year’s December 16 gang-rape case.