June 7, 2023

ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

நாளை முதல் வெளிமாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களும் அதேபோல தமிழகத்திற்குள் கோயம்பத்தூர் முதல் மயிலாடுதுறை வரை, விழுப்புரம் முதல் மதுரை வரை, திருச்சி முதல் நாகர்கோவில் வரை, கோயம்பத்தூர் முதல் காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது இந்த ரயில்களை இல்லாமல் பயணிக்க முடியும் என்ற நிலையில் பெரும்பாலான ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

தற்போது இ பாஸ் இல்லாமல் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்திற்கு செல்ல முடியாது என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு உத்தரவின்படி ரயில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகள் e-pass பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத் திற்கோ/ மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரயில் மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவுசெய்து e-pass பெற்றிருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.