தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250 சதவீதம் அதிகரிப்பு!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250 சதவீதம் அதிகரிப்பு!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாகத் தெரிவதற்கு, தொலைக்காட்சி மற்றும் மொபைல் செய்தி ஊடகங்களில் பாலியல் குற்றம் பற்றிய செய்திகள் அதிகளவில் வெளிவருவதும் ஒரு காரணம் என்று சில தரப்பினர் குறிப்பிட்டது போல் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250 சதவீதம் அதிகரித்திருப்பது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும். தேசிய அளவில் 9.9 சதவீதமாக இருந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதில், 49 சதவீதம் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பு டையவை என்றும், அவை பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ள 5 மாநிலங்களில் தமிழக மும் இடம்பிடித்துள்ளது. பாலியல் தொடர்பான வழக்குகள் முந்தைய ஆண்டை விட 95 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், மாநிலத்தில் 76 வழக்குகள் பதிவாகியுள்ளன, 2018 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை தேசிய அளவில் பார்த்தால் ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போக்ஸோ சட்டத்தின் கீழ் பெரும்பாலான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை கவலைக்குரிய சூழ்நிலைகளை முன்வைத்துள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் பிராந்திய இயக்குநர் கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார்

மேலும், புதுப்புது வழிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அரங்கேறி வருவ தாகவும், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றவர், கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத் துதல் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அதிக முதலீடு செய்வது மூலம் மோசமான போக்கைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!