சிங்கமா இது? இணையவாசிகளை அதிர வைத்த சூடான் பார்க்!

மன்னர்கள் காலத்தில் இருந்து சிம்மம் என்னும் சொல் தலைவன், அரசன் என்பதை குறிக்கும் சொல்லாகவே கருதப்படுகிறது. உதாரணமாக சிம்மாசனம், சிம்ம சொப்பனம் என்று பல சொற் களை குறிப்பிடலாம். ஆற்றலின் அடை யாளமாகவே சிங்கம் அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த வழக்கம் நமது நாட்டில் மட்டும் அல்ல, ஆப்பிரிக்க பழங்குடிகள் தொடங்கி ஐரோப்பா வரை இருந்து வருகிறது. பூனை இனங்களில் புலிகளுக்கு முன்னர் மிகக் கடுமையான அழிவை சந்தித்தவை சிங்கங்களே. கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இவற்றின் அழிவு தொடங்கி விட்டது. அரசர்கள் வேட்டையாடியபோதும், போர்களின்போதும் நாடுவிட்டு நாடு பயணம் செல்லும் வேளைகளிலும், வீர விளையாட்டு என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்டு கொன்றழிக்கப் பட்ட சிங்கங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. இந்நிலையில் சூடான் நாட்டு வன உயிரியல் பூங்கா ஒன்றில் எலும்பும் தோலுமாக கூண்டில் பராமரிக்கப்படும் சிங்கங்கள் குறித்த புகைப்படங் கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு முன்னதாகக் கூட ஐ.நா. உலக உணவுத் திட்டத்தைச் சேர்ந்த ராஸ் ஸ்மித், “முன்னெப்போதும் இல்லாத அளவில் உணவுப்பாதுகாப்பின்மை”யை நோக்கி இந்த கிழக்கு ஆப்பிரிக்க நாடு (தெற்கு சூடான்) சென்று கொண்டிருக்கிறது என்றார். தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் முதல் நீரற்ற நகராக மாறுவது பற்றி செய்திகளும் எச்சரிக்கைகளும் வந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது தெற்கு சூடான் உணவற்ற நிலை என்ற அச்சுறுத் தலை எதிர்கொள்கிறது. தெற்கு சூடான் ‘வறட்சி’ என்று அறிவித்த ஓராண்டுக்குப் பிறகு உலகின் மிக இளம் நாடு என்று அறியப்படும் தெற்கு சூடான் நாட்டு மகக்ள் தொகையில் முக்கால்வாசிப்பேர் தீவிர பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் சிவில் யுத்தம் வேறு ஒருபுறம் தொடர்கிறது. இதே காரணத்தால் பல்வேறு அரசுத் தரப்புகளுக்கும் தேவையான நிதியினை ஒதுக்க முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இணையத்தில் உலாவரும் சிங்கங்களின் படங்கள் காண் போரை கலங்கடித்து வருகின்றன. மிகவும் மெலிந்து ஒடுங்கிய உடல் வெளியில் தெரியும் எலும்பு கள் உடலை விட்டு உயிர் பிரியும் தறுவாயில் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் முகத்துடன் அந்த சிங்கங்கள் இருக்கின்றன.
சிங்கங்களின் நிலை பற்றி பூங்கா ஊழியர்கள் கூறுகையில், ‘சிங்கங்களுக்குத் தேவையான உணவு இல்லை. இதனால் மூன்றில் இரு பங்கு உடல் எடையை சிங்கங்கள் இழந்துள்ளன. சிங்கங்களை கம்பீரமாக கண்டவர்கள், இங்குள்ள சிங்கங்களைப் பார்த்தவுடன் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். எங்களது சொந்தச் செலவில் முடிந்த வரை அவற்றைப் பராமரித்து வருகிறோம்’ என்றனர்.
இதுபற்றிய புகைபடங்கள் வெளியானதும் ட்விட்டர்வாசிகள் பலரும் கொந்தளிப்பான கருத்துக் களை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பலரும் தங்களது கோபம் மற்றும் அதிருப்தியினை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூடான் அரசையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சிங்கங்களுக்கு தகுந்த வசிப்பிடம் மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவற்றைக் காக் க வேண்டும் என ஆன்லைன் பிரசாரம் நடைபெற்று வருது.