எனது உருவ பொம்மையை எரியுங்கள் ஆனால் பொது சொத்தை சேதப்படுத்தீங்கோ!- மோடி

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இதுவரை 33,000 பாதுகாப்பு படையினர் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக தங்களது உயிரை இழந்துள்ளனர். ஆனால், இன்று அவர்களை நீங்கள் கொடூரமாக தாக்குகிறீர்கள். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், காவல்துறையினர் உங்களது மதத்தையோ, சாதியையோ கேட்பதில்லை; நேரம், வானிலை பார்க்காமல் அவர்கள் உங்களுக்காக உதவுகிறார்கள். அதனால் எனது உருவ பொம்மையை எரியுங்கள் ஆனால் ஒருபோதும் பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம் .என்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைத்து, உரையாற்றினார். இதில் கலந்துகொள்ள சுமார் 3,000 பேருந்துகளில் இரண்டு லட்சம் பேர் வருகை தந்துள்ளார்கள் என்று ஒரு செய்தி வந்துள்ளது. 1,731 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் 40 லட்சம் குடும்பங்களின் நில உரிமைக்கான வீட்டுமனைப் பட்டா வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். அத்துடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் மொத்தம் 11 லட்சம் கையொப்பங்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக வாங்கி பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
कुछ लोग सिटिजनशिप अमेंडमेंट एक्ट को गरीबों के ही खिलाफ बताने में लगे हैं।
ये एक्ट उन लोगों पर लागू होगा, जो बरसों से भारत में ही रह रहे हैं। नए शरणार्थी को इस कानून का फायदा नहीं मिलेगा।
ये वो लोग हैं, जिनमें अधिकतर दलित हैं, जिनको पाकिस्तान में बंधुआ मजदूर बनाकर रखा गया था। pic.twitter.com/6uFdO3yLSh
— Narendra Modi (@narendramodi) December 22, 2019
அப்போது , நாங்கள் மக்களுக்காகவே உழைக்கிறோமே தவிர குறிப்பிட்ட மதத்திற்காக அல்ல என்று மோடி பேசியுள்ளார்.
அனைவரின் வளர்ச்சிக்காகவே குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது.
நாங்கள் மக்களுக்காகவே உழைக்கிறோமே தவிர, குறிப்பிட்ட மதத்திற்காக அல்ல; சில அரசியல் கட்சிகள் குடியுரிமைச் சட்டம் குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகளை போல பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்கமாட்டோம். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.
எதிர்க்கட்சிகள் டில்லியில் 2,000 பங்களாக்களை சட்டவிரோதமாக அவர்களின் விஐபிகளுக்கு கொடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகின்றன.
நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் காவலர்களுக்கு மதிப்பு கொடுங்கள். காவலர்கள் எவரின் மதத்தை கேட்டும் உதவுபவர்கள் அல்ல. அவர்கள் அனைவருக்கும் சமமானவர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இதுவரை 33,000 பாதுகாப்பு படையினர் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக தங்களது உயிரை இழந்துள்ளனர். ஆனால், இன்று அவர்களை நீங்கள் கொடூரமாக தாக்குகிறீர்கள். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், காவல்துறையினர் உங்களது மதத்தையோ, சாதியையோ கேட்பதில்லை; நேரம், வானிலை பார்க்காமல் அவர்கள் உங்களுக்காக உதவுகிறார்கள்
அதனால் எனது உருவ பொம்மையை எரியுங்கள் ஆனால் ஒருபோதும் பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம்.
நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகியும் டில்லியில் வாழும் பெரும்பாலான மக்கள் போலி தேர்தல் வாக்குறுதிகளுக்கு மயங்கி ஏமாந்துப் போனார்கள். அனுமதி பெறாத காலனி குடியிருப்பு மற்றும் வீடுகளுக்கு சீல் வைப்பு, இடிப்பு நடவடிக்கைகளில் சிக்கி பலர் வேதனைப்பட்டனர்.
டெல்லியில் குடியிருப்புகளை, காலனிகளை அங்கீகரிக்க யாரிடமாவது என்ன மதம் என்று கேட்டோமா? அல்லது பழமையான ஆவணங்களை கேட்டோமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
’வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பம்சம்’ என பிரதமர் மோடி பேசினார்.