பிரியாணி சமையலில் சேர்க்கப்படும் லவங்கப் பட்டையால் கிட்னி பாதிப்பு!

பிரியாணி சமையலில் சேர்க்கப்படும் லவங்கப் பட்டையால் கிட்னி பாதிப்பு!

நமது அன்றாட உணவில் சூட்டையும் தாண்டி தினசரி மணமாகவும், மருந்தாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் (லவங்க)பட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரம் மசாலா செய்வதற்கு இது தான் பிரதானமானது. ஆனால் இதில் நாம் உபயோகப்படுத்தும் லவங்க பட்டையில் போலி (போலி பட்டை என்று சொல்வதை விட விஷப் பட்டை என்றே அழைக்கலாம்) பட்டைதான் அதிகம் உபயோகத்தில் உள்ளது என்று சில ஆண்டுகாளுக்கு முன்னரே எச்சரிக்கை வந்ததை மக்கள் பொருட்படுத்தாத நிலையில்  பிரியாணி சமையலில் சேர்க்கப்படும் லவங்கப் பட்டையால் கிட்னி பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளது பிரியாணி பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று தமிழர்களின் வாழ்வோடு பிணைந்துவிட்ட உணவு பிரியாணி. கிராமங்களில் கிடா வெட்டு நிகழ்வில் கூட பிரியாணி இடம் பெறும் அளவுக்கு அது தமிழர்களின் எல்லா மட்டங்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களின் முதல் தேர்வு பிரியாணி தான். .. பெரும்பாலான உணவுப் பிரியர்களை நாவில் எச்சில் ஊறவைக்கும் அரேபிய உணவு..! எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காத உணவு..! இந்த ருசிமிக்க உணவு சமைக்க பயன்படுத்தப்படும் லவங்கப் பட்டையால் பிரியாணிக்கு புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

இந்தியாவில் பட்டையின் வருடாந்திர உபயோகம் 12000 டன் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது தவறு என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் வாதிடுகிறார்கள். காரணம், கான்பூரில் உள்ள வியாபாரி ஒருவரால் மட்டுமே வருடம் ஒன்றிற்கு 9500 டன் போலி பட்டை இறக்குமதி செய்யப்படுகிறது என்கிற தகவல் உள்ளது.

கேரளாவில் கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களில் வருடம் ஒன்றுக்கு சுமார் 200 டன் பட்டை உற்பத்தி seyyaஆகிறது. (போலி பட்டையின் இறக்குமதி அதிகமாக உள்ளதால் ஒரிஜினல் பட்டை உற்பத்தியின் பரப்பளவு மிகவும் குறந்து வருகிறது. காரணம் உரிய விலை கிடைப்பதில்லை) பெரும்பாலும் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டை தான் ஒரிஜினல். ஒரு கிலோ ஒரிஜினல் க பட்டையின் தோராயமான இறக்குமதி விலை ரூ.200/-

போலி (லவங்க)பட்டை என்பதை ஆங்கிலத்தில் CASSIA CINNAMON என்று கூறப்படுகிறது. இது பார்ப்பதற்கு சிலோன் (லவங்க)பட்டையை போல் இருக்கும். இந்த போலி பட்டை என்பது சீனா, இந்தோனேஷியா, வியட்னாம், போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனுடைய இறக்குமதி விலை ஒரு கிலோ ரூ.35/-தான்.

இந்தபட்டையில் COUMARIN என்ற கெமிக்கல் உள்ளது. இந்த COUMARIN கெமிக்கலானது RODANT என்று சொல்லப்படும் எலி மற்றும் கரப்பான் பூச்சி விஷம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விஷத்தன்மையை அறிந்து இதன் உபயோகத்தை ஐரோப்பிய நாடுகளில் தடை செய்து விட்டார்கள். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் எலி விஷம் தயாரிப்பதற்க்காக மற்றும் சிறப்பு அனுமதியின் பேரில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

நம் நாட்டில் இந்த போலி பட்டையின் இறக்குமதியை தடை செய்யக் கோரி (லவங்க)பட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்பைஸ்ஸ் போர்ட் (SPICES BOARD) மத்திய அரசிடம் 2007ம் ஆண்டிலிருந்து போராடி வந்தது. நீண்ட போராட்டதிற்கு பின்பு தற்போது போலி பட்டையை (CASSIA CINNAMON) RESTICTED ITEM என்று இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளார்கள்.

இது போதாதா நம்மவர்களுக்கு?

நம் நாட்டில் வருடம் ஒன்றிற்கு போலி பட்டையானது பல ஆயிரம் டன் இறக்குமதி செய்யப் படுகிறது. இதனுடைய இறக்குமதி விலை ஒரு கிலோ ரூ.35/-தான். இந்த போலி பட்டையானது கிலோ ஒன்று ரூ.150/- முதல் ரூ.600/- வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ.150/-க்கு விற்பனை செய்தாலே சுமார் 300% லாபம் கிடைக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் தம்மால் விற்பனை செய்யப்படுவது போலி பட்டைதான் என்பது பெரும்பாலான விற்பனையாளர்களுக்கு தெரிவதில்லை. ஒரிஜினலும், போலியும் பார்ப்பதற்கு ஒன்று போலவே தெரியும், மேலும் இதன் வாசனையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும்..

இந்நிலையில்தான் கேசியா லவங்கப் பட்டை என்றழைக்கப்படும் லவங்க மரத்தின் தட்டையான பட்டையில் கவ்மரின் (coumarin) என்ற ரசாயணம் இருப்பதாகவும் அந்த ரசாயணம் தான் பிரியாணி பிரியர்களுக்கு மெல்ல கொல்லும் விஷமாக மாறி வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர் மருத்துவர்கள்.

குறிப்பாக இந்த வகை லவங்கப் பட்டை சேர்க்கப்பட்ட பிரியாணியை தொடர்ச்சியாக உண்ணும் போது வாய்ப்புண், சுவாசக் கோளாறு என தொடங்கி, கிட்னி செயல் இழப்பு, கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் என 6 வகையான பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

அதனால் பிரியாணியில் லவங்கப் பட்டையே பயன்படுத்தக் கூடாதா ? அல்லது பிரியாணி சாப்பிடுவதையே தவிர்த்து விடலாமா ? என்று ஆதங்கப்படத் தேவையில்லை. இதற்கு மாற்றுப் பொருள் உள்ளது. கேசியா லவங்கப் பட்டையை விட 5 மடங்கு விலையுள்ள சுருள் வடிவில் இருக்கும் சிலோன் சினமன் எனப்படும் லவங்கப் பட்டையை பயன்படுத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்கின்றனர் மருத்துவர்கள்.

சுருள் வடிவ லவங்கப் பட்டையில் இயற்கையிலேயே உடலுக்கு நன்மை பயக்கும் ரசாயணங்கள் இருப்பதால், இந்த வகை லவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்ட பிரியாணியை உண்பதால் எந்த பாதிப்பு ஏற்படுவது இல்லை என்றும் தீர்வு சொல்கின்றனர் மருத்துவர்கள்..!

இது தொடர்பாக உணவுப்பொருள் பாதுகாப்பு மற்றும் கலப்பட்ட தடுப்புத் துறையினர், ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அழைத்து 44 வகையான பொருட்களில் என்ன மாதிரியான கலப்படம் எல்லாம் நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டி மக்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தினர்.

அதன்படி மிளகில் காய்ந்த பப்பாளி விதைகளும், சர்க்கரையில் யூரியாவும்,கலக்கப்படுவதாகவும், பதப்படுத்தப்பட்ட பேரீச்சம்பழத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஆயில் மற்றும் ரசாயணக் கலவை கலக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்று பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பேரீச்சம் பழத்தை மட்டுமே வாங்கி சாப்பிட வேண்டும் என்று கூறினர். அதை விடுத்து கடைகளிலோ அல்லது தெருவில் தள்ளு வண்டிகளில் கொண்டுவரப்படும் பேரீச்சம்பழத்தை வாங்கிச் சாப்பிட்டால் உடல்நலத்திற்கு கேடு விளையும் என்று எச்சரித்துள்ளனர்.

உணவே மருந்து என வாழ்ந்து உடலை வலுவாக்கியவர்கள் நமது முன்னோர், தற்போதைய காலத்திற்கு ஏற்ப குறைந்தபட்சம் கலப்படமற்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு பயனடைய வேண்டும் என்பதே அதிகாரிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Posts