காஷ்மீர் எல்லையில் நமது ராணுவ வீர்ர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர்!

காஷ்மீர் எல்லையில் நமது ராணுவ வீர்ர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர்!

கடந்த ஆண்டுகளில் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் எல்லையில் நமது ராணுவ வீர்ர்களுடன் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடினார்.

நாட்டைக் காக்கும் பணியில் குடும்பத்தினரை விட்டு பல நூறு கிலோமீட்டர் தூரத்தில் நாட்டின் எல்லையில் நமது ராணுவ வீரர்கள் பணிபுரிகிறார்கள். அதனால் பண்டிகை நாளன்று கூட குடும்பத்தினருடன் பண்டிகைகளைக் கொண்டாட முடிவதில்லை. நம் ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக தீபாவளியை எல்லையில் பணியாற்றும் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுடன் கொண்டாடுவது நமது பிரதமர் நரேந்திர மோடியின் வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு காஷ்மீர் எல்லையில் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீர்ர்களுடன் தீபாவளியைக கொண்டாடினார். ராணுவ வீரர்களுக்கு தீபாவளி லட்டுகளை பிரதமர் மோடி வழங்கினார்

முன்னதாக பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தாக்குதல்களில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக, நிறுவப்பட்டுள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர், இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில், பிரதமர் மோடி உரையாற்றியும், இனிப்புகளை வழங்கியும், ராணுவ வீரர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் தனது தீபாவளி நல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் நாடானது ஆக்கிரமித்த காஷ்மீரை கைப்பற்றுவதற்காக, 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய படைகள் முதன் முதலாக, காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் முதல் படைப்பிரிவு, முதன் முதலாக, 27-10-1947- அன்று தான் காஷ்மீருக்குள் நுழைந்தது. ஒவ்வொரு ஆண்டிலும், அந்த நாளை குறிப்பிடும் வகையில், “இன்பான்ட்டரி டே”. என்று நமது நாட்டின் ராணுவ வீரர்களால் நினைவு கூர்ந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டின் “இன்பான்ட்டரி டே’”, தினமும் தீபாவளி திரூ விழாவும், ஒரு சேரும் விதமாக, ஒரே நாளில் சங்கமமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!