ஐ எஸ் ஐ எஸ் இயக்கத் தலைவன் அபுபக்கர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்!

ஐ எஸ் ஐ எஸ் இயக்கத் தலைவன் அபுபக்கர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்!

சர்வதேச அளவில் பல அழிவுப் செயல்களைச் செய்தபடி தலைமறைவாக இருந்த IS பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கொல்லப் பட்டதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்..!

உலகின் பெரியண்ணா என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி பலியானதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் நகரைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளன. அமெரிக்க சிறப்புப் படையின் தாக்குதலில் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் 3 பேர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பு தெரிவித்த பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்களை தலையில் சுட்டுக் கொன்ற ISIS பயங்கரவாதிகள், அவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று ஆவேசக் கூச்சலிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அழகிய இளம்பெண்களை கடத்திச் சென்று தங்களது பாலியல் தேவைக்கும் பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

இதை தொடர்ந்து, IS பயங்கரவாதிகளின் அராஜக ஆட்சியை வீழ்த்தி விட்டோம் என ஈராக் பிரதமர் ஹைடர் அல்-அபாடி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அறிவித்திருந்தார். போலி இஸ்லாமிய ஆட்சியின் முடிவுநாளை இன்று நாம் காண்கிறோம் என்று குறிப்பிட்ட அவர் இந்த சாதனைக்காக ஈராக் ராணுவம் மற்றும் பன்னாட்டு கூட்டுப்படைகளுக்கு பாராட்டும் தெரிவித்தார். இறுதி மூச்சுள்ளவரை மோசூல் நகரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என முன்னர் சபதமேற்றிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளும் ராணுவத்தினருக்கு எதிராக மூர்க்கத்தனமாக போரிட்டு இறுதியாக உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர்.

தப்பிடோடிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக் நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாலவனங்களில் தலைமறைவாக பதுங்கினர், அந்த இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக சில முறை ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால், அவை எல்லாம் உறுதிப்படுத்த முடியாத தகவல்களாகவே அமைந்திருந்தன. சிரியா நாட்டின் இட்லிப் மாகாணத் தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தலைமறைவாக இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரி தற்போது தெரிவித்து உள்ளார். இந்த தகவலையும் உறுதிப்படுத்த முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!