600 ரூபாய் விலையில் பேப்பர் மைக்ரோஸ்கோப் அறிமுகம்.!

600 ரூபாய் விலையில் பேப்பர் மைக்ரோஸ்கோப் அறிமுகம்.!

மனுபிரகாஷ் என்னும் இந்தியாவை சேர்ந்த ஸ்டான்ஃபோர்ட் ஆராய்ச்சி மாணவன் வெறும் பேப்பரில் இயங்கும் மைக்ரோஸ்கோப்பை கண்டுபி டித்து சாதனை செய்திருக்கிறான். முழுவதும் காகிதத்தால் உருவாக்கப்பட்டுள்ள, இந்த மைக்ரோஸ்கோப்பில், மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையில், பரிசோதனை செய்ய வேண்டிய, மாதிரியுடன் கூடிய ஸ்லைடை பொருத்த வேண்டும்; இரண்டாவது நிலையில், அதன் மீது கோள வடிவிலான லென்சை வைத்து, மூன்றாவது நிலையில், “லெட்’ விளக்கொளியை ஒளியூட்ட வேண்டும். இதில் வைக்கப்பட்ட மாதிரியை பெரிதாக்குவதற்கு, போல்டுஸ்கோப்பை நம்முடைய கட்டை விரலால் நகர்த்துவதன் மூலம் பெரிதாக்கலாம்.
ravi - apr 7
சாதாரண பேப்பரில் செய்திருப்பதால், இதை தயாரிப்பதற்காகும் செலவு மிகவும் குறைவு என்பதால், அனைவரும் சுலபமாக பயன்படுத்தலாம், என்கிறான் மனுபிரகாஷ். வருங்காலத்தில் ஒவ்வொரு நோய்க்கும் அது சம்பந்தமான, தனியான மேம்படுத்தப்பட்ட போல்டுஸ்கோப்புகள்’ பயன்படுத்தப்படும்’ எனறு நம்பலாம் .

அது மட்டுமின்றி இதன் மூலம் ஆய்வு எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்ய முடியும். இதை கொண்டு செல்ல பாக்கெட் போதும் என்பதாலும் இதன் விலை 600 ரூபாய்க்கு கீழ் என்பதாலும் இனி இதனை ஒவ்வொரு சுகாதார செவிலியர் கூட எடுத்து சென்று ஆய்வு செய்ய இயலும் என்பது கூடுதல் ஹேப்பி நியூஸ் .

Indian American invented Foldable paper microscope costs less than $10 – 600

Related Posts