2023 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகல்!! பிரசித் கிருஷ்ணா சேர்ப்பு!!

2023 உலகக் கோப்பை:  இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகல்!! பிரசித் கிருஷ்ணா சேர்ப்பு!!

லக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இது வரை விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியே பெறாமல் அதிரடியாக முதல் அணியாக நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியிருக்கிறது.அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்த விஷயம் வேகம் மற்றும் சுழல் என இரண்டுக்கும் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா என இருவர் இருந்தது.

இதில் இந்திய அணி கடந்த அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மைதானத்தில் பந்தை துரத்தி செல்கையில் கால் இடறி கீழே விழுந்துவிட்டார். இதன் காரணமாக அந்த ஓவரில் விராட் கோலி பந்து வீசி நிறைவு செய்து இருந்தார். காயம் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹர்த்திக் பாண்டியா நேரடியாக அரையிறுதி போட்டிக்கு உடல் தகுதி பெற்று இந்திய அணியில் இணைவார் என கூறப்பட்டது. இதற்காக ஒருநாள் பேட்டிங் பயிற்சியில் கலந்து கொண்டார்.

இருந்தும் அவர் இன்னும் சிகிச்சையில் தான் இருக்கிறார். இதனால் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா உலக கோப்பை தொடரில் இருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாற்று வீரரே இல்லாத ஹர்திக் பாண்டியா காயத்தால் தொடரை விட்டு விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஆறாவது பந்துவீச்சாளராக நாக் அவுட் போட்டிக்கு யாரையும் நம்பி இருக்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் அவருடைய இடத்திற்கு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டு இருக்கிறார். விளையாடும் வேகப்பந்துவீச்சாளர்களில் யாராவது காயம் அடையும் பொழுது மாற்று வீரராக அவர் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா, “உலகக் கோப்பையின் மீதமுள்ள போட்டிகளை நான் மிஸ் செய்வேன் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஒவ்வோர் ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் அவர்களை உற்சாகப்படுத்தி, உற்சாகத்துடன், அணியுடன் இருப்பேன். அனைவரின் வாழ்த்துகளுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி. எனக்கு இந்த அணி மிகவும் ஸ்பெஷல். நிச்சயமாக அனைவரையும் பெருமைப்படுத்துவோம் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!