உருகுவே நாட்டின் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஒதுங்கிய 2000 பென்குவின்கள்!

உருகுவே நாட்டின் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஒதுங்கிய 2000 பென்குவின்கள்!

ருவநிலை மாற்றம், பெரும் புயல், பெரும் வறட்சி, நிலச்சரிவு, கடல்நீர் மட்டம் உயர்வு உட்பட பல்வேறு துயரங்கள் பூமியை சூழ்ந்துள்ளன. இந்த தலைமுறை இயற்கையை காப்பாற்றாமல் போனால், இயற்கையை பார்க்கும்கடைசி தலைமுறை இவர்களாகத்தான் இருப்பார்கள். மரம் நடுவது மட்டுமல்ல, பூமியில் நிகழும் சுற்றுச்சூழல் மாற்றங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தர வேண்டும். மொரீஷியஸ் நாட்டில் வாழ்ந்த ‘டோலா’ என்ற பறவையை மனிதன் அழித்தான். அவர்களின் வாழ்வியல் விழுமியங்களில் காலங்காலமாக வழிபட்டு வந்த கல்வார் மேஜர் என்ற மரம் அழிவுற்றது. டோலா பறவை, கல்வார் மேஜர் மரத்தின் விதையை உண்டு, செரித்து நொதி செய்து அந்த விதைகள் வளர்ந்தன. ஆனால் மனிதர்கள் வளர்த்த விதைகள் வளரவில்லை. பறவை அழிந்தது.தொடர்ந்து தாவரம் அழிந்தது. தாவரம் அழிந்ததால், பூச்சிகள் மடிந்தன. பல்லுயிர்ச்சூழல் கெடுகிறது.நம் நாட்டிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளை, காடுகளை நாம் கொண்டாட வேண்டும். கடல் மட்டம் உயர்வால், பென்குயின் பறவை தன் இனப்பெருக் கத்தை நிறுத்தி ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. கடற்கரையில் இடப்படும் முட்டைகள், கடல் மட்டம்உயர்வால் கடலுக்குள் சென்றுவிடு கின்றன. அவற்றால் குஞ்சு பொரிக்க முடியவில்லை. இந்த பூவுலகு, மனி தர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை. அனைத்து உயிர்களுக்கும் சொந்தம்.

இதை புரிந்து கொள்ளாததால் கடந்த 10 நாட்களில் தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் கடற்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் பென்குவின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இவை மெகலானிக் பென்குவின் என்று அழைக்கப்படுபவை ஆகும் . .ஆய்வாளர்கள் இவை அட்லாண்டிக் கடலில் உயிரிழந்து, பின்னர் உருகுவே கடற்கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பென்குவின்கள் உயிரிழக்க என்ன காரணம் என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு கரை ஒதுங்கிய பென்குவின்களுக்கு இன்புலுயென்சா காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கரை ஒதுங்கிய பென்குவின்கள் அனைத்தும் இளம் வயதுடையவை என்றும், அவற்றின் வயிற்றில் உணவு பொருட்கள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே உணவு பற்றாக்குறை காரணமாக பென்குவின்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், இது தொடர்பாக அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உருகுவே நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது

error: Content is protected !!