‘பறந்து போ’ படத்தில் 19 பாடல்கள் – இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி!

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது.
படத்திற்கு இசையமைத்திருக்கும் சந்தோஷ் தயாநிதி பகிர்ந்து கொண்டதாவது, ”’பறந்து போ’ பட சமயத்தில் யுவன் சார் பிஸியாக இருந்ததால் எனக்கு அந்த வாய்ப்பு வந்தது. படத்தில் கிட்டத்தட்ட 19 பாடல்கள் இருக்கிறது. இதுமட்டுமல்லாது, படத்தின் பின்னணி இசையிலும் பல பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது இதுவே முதல்முறை.
டைரக்டர் ராம் வழக்கமாக கொடுக்கும் இசையை விரும்ப மாட்டார். புதிதாக, வித்தியாசமான இசையை எதிர்பார்ப்பார். ‘பறந்து போ’ கமர்ஷியல் படம் தான். அதில் ராம் சாரின் ஸ்டைலும் இருக்கும். வாய்ப்பு தந்த ராம் சாருக்கு நன்றி. ஒரு படத்தையும் இசையையும் எப்படி பார்க்க வேண்டும் என்பதை ராம் சாரிடம் கற்றுக் கொண்டேன். பாடலாசிரியர் மதன் கார்க்கி சாருக்கும் நன்றி” என்றார்.
நடிகர்கள்: சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.