32°C
விளம்பரம்
Advertisement

ஆன்டி பயாடிக் மாத்திரைகள் இனி பவர் இருக்காது! சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

admin சேலம் Published: May 1, 2014 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களை குணப்படுத்துவதற்காக ஆன்டி பயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே டாக்டர்கள் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நோய்களின் தாக்கத்தை குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளே கொடுக்கப்படுகின்றன.இப்படி ‘ஆன்டி பயாடிக்’ மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உடலில்ன்உள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று தெரிவித்து வந்த நிலையில் தற்போது இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வேலை செய்யாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
antiniotics tabs
நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான உடல்வாகு இருக்கும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், நம்முடைய விருப்பத்திற்கு தகுந்தாற்போல் மாத்திரையை சாப்பிடும்போது, அந்த மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அல்சர், வயிற்று பிரச்சினை, சிறுநீரக பாதிப்பு போன்றவை உண்டாகும். பொதுவாக மாத்திரை சாப்பிடுபவர்கள் தண்ணீர் அதிகம் குடிக்க மாட்டார்கள். இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படும். நீரிழிவு உள்ளவர்கள் டாக்டரின் அறிவுரை இன்றி மாத்திரைகளை சாப்பிடும்போது பிரச்சினை பெரிதாகும்.இந்தியாவில் உருவாக்கப்படும் மாத்திரை களில் பெரும்பாலும் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்புகளுக்கும் மற்றும் இன்னும் சில தேவைகளுக்கும் சேர்த்தே ஒரே மாத்திரையாக தயாரிக்கின்றனர். இதனால் தான் நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

அத்துடன் நம்மில் பலருக்கு காலையில் டிபன் சாப்பிடும் பழக்கம் குறைவு. மேலும் வெறும் வயிற்றில் காபி, டீ மற்றும் பால் சாப்பிட்டுவிட்டு மாத்திரைகளை சாப்பிடும் பழக்கமும் உள்ளது. இதனால் உடலில் பல வித நோய்களை நீங்களே வரவழைக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உங்களின் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறையும். வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும் என்று தெரிவிக்கபட்டு வந்த நிலையில் நோயை உண்டாக்கும் சூப்பர் பக்ஸ் எனும் கிருமிகள் முன்பு இருந்ததை விட இப்போது வீரியத்துடன் உருவாகி வருகின்றன. எனவே தற்போது உள்ள ஆன்டி பயாடிக் மருந்துகளை இனி பயன்படுத்தினால் அதனால் எந்த பயனும் கிடைக்காது.

எனவே சூப்பர்சக்தி கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.மேலும் டாக்டர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை அதிக அளவில் பரிந்துரைப்பது நோயாளிகள் இத்தகைய மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் சாப்பிடாமல், இடையில் நிறுத்துவது போன்ற காரணங்களால் நோய் கிருமிகள் வீரிய சக்தியுடன் மாறி இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்