ஹிருத்திக் ரோஷனின் ’பேங் பேங்’
இந்த வருடத்தின் மிக பிரம்மாண்டமான படம் என இந்திய திரைப்பட துறையையே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இளம்பெண்களின் கனவு நாயகன் ஹ்ரிதிக் ரோஷன் – இளைஞர்களின் கனவு நாயகி கத்ரீனா கைப் ஜோடியாக நடிக்கும் ‘பேங் பேங்’ படத்தின் தமிழ்ப்பாடல்கள் இந்த மாதம் இசை வடிவமாக வெளி வருகிறது.ஹிந்தியில் வெளிவந்த இந்த படத்தின் பாடல்கள் மிக பெரிய ‘Hit ‘ என கூறப்படுகிறது.தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்தியில் ஹ்ரிதிக் ரோஷனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.
அவரது படங்களில் உலக தரத்துடன் ஒப்பிடக்கூடிய அதிரடி சண்டை காட்சிகள் இருக்கும்.அந்த எதிர்பார்ப்பை ‘ பேங் பேங் ‘ நிச்சயம் பூர்த்தி செய்யும். தமிழில் இந்த படத்துக்கான பாடல்களை மதன் கார்கி இயற்றி உள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி உலகெங்கும் வெளியிட படுகிறது.





