32°C
விளம்பரம்
Advertisement

ஷேர் ஆட்டோக்கள் & டாடா மேஜிக் வாகன கட்டணத்தை முறைபடுத்து!-ஹைகோர்ட்டில் வழக்கு

admin சேலம் Published: February 25, 2014 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சென்னையில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு கட்டணம் முறைப்படுத்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஷேர் ஆட்டோக்கள் எவ்வித கட்டண வரைமுறையும் இல்லாமல் இயங்கி வருகிறது. எனவே, ஷேர் ஆட்டோ மற்றும் டாடா மேஜிக் போன்ற வாகனங்களுக்கான பயணக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
auto feb 25
007–ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது தமிழக அரசு ஆட்டோக்களுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது. இந்த கட்டணம் கடந்த மாதம் 25–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.திருத்தி அமைக்கப்பட்ட அட்டையையும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் வழங்கப்பட்டது. இதனை முறையாக நடைமுறைப்படுத்தவும் அரசு அறிவுறுத்தியது. இதனை ஏற்று பல ஆட்டோ டிரைவர்களும் புதிய கட்டணப்படி ஓட்டி வருகின்றனர்.ஆனாலும் போதிய அளவு ஆட்டோ டிரைவர்களுக்கு வருமானம் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பி.அண்ணாமலை, டி.வெங்கடேசன் உள்பட ஐந்து ஆட்டோ டிரைவர்கள் சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்:”நாங்கள் அனைவரும் ஒப்பந்த வாகன அனுமதி (கான்ட்ராக்ட் காரேஜ் பெர்மிட்) பெற்று ஆட்டோக்களை இயக்கி வருகிறோம். எங்களுக்கு வழங்கப்பட்ட அதே அனுமதி டாடா மேஜிக், மேக்ஸி கேப், அபே போன்ற ஷேர் ஆட்டோக்களுக்கும் வழங்கப்படுகின்றன.

இந்த அனுமதியின்படி ஒரு இடத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு, மற்றொரு இடத்தில் அவர்கள் இறங்கும் வரை வழியில் வேறு எந்தப் பயணியையும் வாகனத்தில் ஏற்றக் கூடாது என்பதாகும். வாகனச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அளவு பயணிகளை மட்டுமே ஆட்டோவில் ஏற்ற வேண்டும்.ஆனால், ஷேர் ஆட்டோக்கள் அதிகமான பயணிகளை ஏற்றுகின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் வழியில் பல பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். அதில், ஒவ்வொரு பயணியிடமும் தனித் தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர்.

இது மோட்டார் வாகனச் சட்டதை மீறுவதாகும். இதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஷேர் ஆட்டோக்கள் தினமும் ரூ.100 அபராதம் செலுத்துகின்றனர்.போக்குவரத்து துறையில் ஒரு அனுமதி பெற்று, அதை வேறுவிதமாக பயன்படுத்தும் வாகனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 52-ன் படி வாகனங்களின் உண்மையான வடிவமைப்பை மாற்றக்கூடாது. அவ்வாறு மாற்ற விரும்பினால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து பதிவுத் துறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

டாடா மேஜிக், அபே போன்ற ஷேர் ஆட்டோக்கள் பதிவுத் துறையின் அனுமதி பெறாமலே பயணிகளுக்கு ஏற்ற வகையில் அதன் வடிவமைப்பை எவ்வாறு மாற்ற முடியும்?இது தவிர, ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மூன்றுதான். ஆனால், இங்கு 7 முதல் 10 பேர் வரை அமரும் வகையில் அதன் இருக்கை அமைப்பை மாற்றுகின்றனர். இது தொடர்பாக மூன்று முறை அரசுக்கு மனு அளித்தோம்.

ஆனால் எங்களது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முறையான அனுமதி இல்லாமல் இயங்கும் ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை வேண்டும். மேலும், ஷேர் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் “என அமமனுவில் கோரப்பட்டது.இந்த மனு நீதிபதி வி.ராமசுப்ரமணியன் முன்பு வெள்ளிக்கிழமை (பிப்21) விசாரணைக்கு வந்தது.அரசுத் தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞர் பி.சஞ்சய்காந்தி ஆஜரானார். இந்த மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்