வெள்ளிக்கிழமை 13ம் தேதி ஆல்பம்

வெள்ளிக்கிழமை 13ம் தேதி ஆல்பம்

பேய் பட வரிசையில் அடுத்த படமாக வருகிறது. வெள்ளிக்கிழமை 13ம் தேதி. படத்தின் தலைப்பை வித்தியாசமாக வைத்திருக்கும் இயக்குநர் புகழ்மணி, படத்தை பயங்கர பேய்கள் சூழ எடுத்திருக் கிறாராம்.


ஹீரோ ரத்தன் மௌலி தன்னுடைய திருமணத்தை ஒரு வெள்ளிக்கிழமை 13ம் தேதி நடத்த திட்டமி டுகிறான். இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று பதிமூன்று பேய்கள் பயங்கர கோபத்துடன் ஹீரோவைத் துரத்துகின்றன.

ஏன் அந்த நாளை ஹீரோ தேர்ந்தெடுத்தான் என்பதையும், பேய்கள் ஹீரோவை திருமணம் செய்ய விடாமல் ஏன் தடுகின்றன என்பதையும் நகைச்சுவையும், திகிலும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

Related Posts