விஷால் _ காஜல் நடித்த ‘பாயும் புலி’ மினி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
விஷால், காஜல் அகர்வால் நடிப்பில் வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘பாயும் புலி’. இப் படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். படம் பற்றி விஷாலிடம் கேட்ட போது, “பாயும் புலி’ பற்றிப் பலரும் பல விதமாகக் கேட்கிறார்கள். இந்தத் தலைப்பை கேட்டபோது தயாரிப்பாளர் ஏவி.எம். பாலசுப்ரமணியம், மறுப்பு கூறாமல் உடனே கொடுத்தார். இந்தப் ‘பாயும் புலி’ தலைப்பு, படத்திற்கு மிகப் பெரிய பலம். சக்தியும், ஊக்கமும் தரும் தலைப்பு இது. இது எதை நோக்கிப் பாயுது என்பது படத்தின் க்ளைமாக்ஸில்தான் புரியும்.இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல. ஆனால், உண்மைச் சம்பவத்தின் சாயல் தெரியலாம் இதே சாயலில் சில சம்பவங்கள் மதுரையில் நடந்துள்ளன” என்றார்.








