விஷாலை விநியோகஸ்தராக்கிய ‘”ஜீவா”-’ஆல்பம்

விஷாலை விநியோகஸ்தராக்கிய ‘”ஜீவா”-’ஆல்பம்

நடிகர் விஷால் நடிப்போடு, சொந்த்த் தயாரிப்பையும் துவக்கி தயாரிப்பாளராக மாறி ‘பாண்டிய நாடு’ படத்தை அவரது சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் எண்டி செய்தவர் . இப்போது விநியாகஸ்தராகவும் மாறி விட்டார்.இயக்குநர் சுசீந்திரன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘ஜீவா’ படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை நடிகர் விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி சார்பில் வாங்கியிருக்கிறார்.விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் இந்தப் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் விஷால் பிலிம் பேக்டரியின் முதல் தயாரிப்பான ‘பாண்டிய நாடு’ படத்தில் பணியாற்றியவர்கள்தான்.‘ஜீவா’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறதாம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் இரண்டாவது படம் இதுதான்.. இதில் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார்.