32°C
விளம்பரம்
Advertisement

தொழில் வளர்ச்சி பட்டியலில் தமிழகம் கடைசி இடம்!- மத்திய அரசு தகவல்

admin சேலம் Published: September 10, 2014 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் 2012–13 ஆம் ஆண்டில் எட்டிய பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகப் பொருளாதார வளர்ச்சி குறித்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பீகார் 10.73 சதவீதம் வளர்ச்சியுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு வெறும் 3.39 சதவீதம் பொருளாதார வளர்ச்சியுடன் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.இப்படி தொழில் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
Rs in tn 1
கடந்த 2012-13ம் ஆண்டுக்கான சிறப்பு பிரிவு அல்லாத மாநிலங்களில் தொழில் வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை, மத்திய புள்ளியியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன் படி, தொழில் வளர்ச்சியில் பீகார் மாநிலம் 10.73 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2010-11ம் ஆண்டில் பீகார் வளர்ச்சி சதவீதம் 15.03 சதவீதமாகவும், 2011-12ல் 10.29 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத் தக்கது. ம.பி., மாநிலம் 9.89 சதவீதத்துடன் 2வது இடத்தையும், டில்லி 9.33 சதவீத வளர்ச்சியுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த வரிசையில் குஜராத்திற்கு 6வது இடம் (7.97%) கிடைத்துள்ளது. தமிழகம் 3.39 சதவீத வளர்ச்சியுடன் 18 மாநிலங்கள் கொண்ட பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் சராசரி தொழில் வளர்ச்சி வீதமான 4.5 சதவீதத்தை விட தமிழகம் குறைவான வளர்ச்சியை அடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஒட்டு மொத்த இந்தியாவில் வறுமைக்கும் பின்தங்கிய தன்மைக்கும் உதாரணமாக காட்டப்படும் பீகார் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே பீகார் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி வருகிறது.மற்ற பின்தங்கிய மாநிலங்களான மத்தியப்பிரதேசம் 9.89 சதவீதம் வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், ஒடிசா 8.09 சதவீதம் வளர்ச்சியுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஜார்க்கண்ட் 7ஆவது இடத்தையும், மேற்குவங்கம் 8 ஆவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

அண்டை மாநிலமான கேரளம் 8.24 சதவீதம் வளர்ச்சியுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால், இந்தியாவின் முன்னணி மாநிலம் என்று பெருமை பேசப்படும் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. தேசிய சராசரி பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் ஆக உள்ள நிலையில் அதைக்கூட எட்ட முடியாமல் 3.39 சதவீதம் வளர்ச்சியுடன் தமிழகம் முடங்கி விட்டது.இங்கு சுமார் 95 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என துயரம் மிகுந்த திசையில் முதலிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் மறைத்து விட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.நல்ல நிலையில் இருந்த தமிழகப் பொருளாதாரத்தை கடைசி நிலைக்கு கொண்டு சென்றது பற்றி இனி வரும் காலங்களில் தமிழ் நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என்பது உறுதி.” என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் கூறுகையில், தொழில் வளர்ச்சியில் வடமாநிலங்களை விட தமிழகம் சிறந்து விளங்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கடைசி இடத்தில் உள்ளது என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இதே போல், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறைந்ததன் காரணமாக ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு செல்வதாக கூறியுள்ளார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்