விமானம் – விமர்சனம்!

‘மனோகரா’ காலம் முதல் தமிழ்த் திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட்டுக்குத் தனியிடம் உண்டு. தாய் மகன் பாசம் பற்றிப் பல படங்கள் உருகி வழிந்திருக்கின்றன. அது போல் அப்பா – மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டு தமிழில் தெய்வ மகன் முதல் டான் வரை எண்ணற்ற திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மனதை வென்றதோடு மட்டுமல்லாமல் , வசூல் சாதனைகளை படைத்துள்ளது. அந்த வரிசையில் இணைய முற்பட்டிருக்கும் படமே ‘விமானம்’. ஆனால் எடுபடவில்லை..!
கதை என்னெவென்றால் பப்ளிக் டாய்லெட் -டை மெயிண்டெயின் செய்து வாழ்க்கையை ஓட்டும் உடல் ஊனமுற்ற நபர் வீரையா(சமுத்திரக்கனி). இவரது ஒரே மகன் சிறுவன் ராஜுவுக்கு (மாஸ்டர் துருவன்) ஆகாய விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசை. இச்சூழலில் ராஜுவுக்கு புற்றுநோய் இருப்பதும், இந்த நோயால் மகன் விரைவில் இறந்து விடுவான் என்றும் தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் அப்பா வீரையா மகனின் கடைசி ஆசையான விமானத்தில் செல்லும் ஆசையை நிறைவேற்ற துடிக்கிறார். ஒரு விமான நிறுவனம் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்தால் போதும் விமானத்தில் பயணம் செய்ய முடியும் என்றது. இதற்காக, அந்த பணத்திற்காக மெனக்கெடுகிறார் வீரையா. இறுதியில் என்ன ஆனது என்பதே விமானம்
மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி தன் கேரக்ட்ரின் கனம் புரிந்து கலக்கி இருக்கிறார்..சமுத்திரகனியின் மகனாக வரும் மாஸ்டர் துருவன் சிறப்பாக நடித்திருக்கிறார். அப்பாவின் கஷ்டங்களை புரிந்து கொண்டு படிப்பில் திறமையாக படிப்பது, தன்னுடைய கனவுக்காக போராடுவது, விமானத்தை பார்த்து தன்னுடைய இடங்கள் என திறமையாக நடித்திருக்கிறார். சில இடங்களில் நடிப்பு மிகை என்பதும் அப்பட்டமாக வெளிப்படுகிறது.. மொட்டை ராஜேந்திரன், ராகுல் ராமகிருஷ்ணா செய்யும் காட்சிகளால் படத்தின் மீதே வெறுப்பு வந்து விடுகிறது. . மேலும், கவுரவ ஏர் ஹோஸ்டஸ் வேடத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். அனுசுயாவின் கவர்ச்சிகரமான விபச்சாரி ரோல் தேவையற்றதாக இருக்கிறது.
சரணின் இசை கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை.. . குறிப்பாக, பின்னணி இசை சீரியல் பார்க்கும் அளவிற்கு இருக்கிறது.
மேலும் எடுத்துக் கொண்ட கதையின் ஒவ்வொரு காட்சியும் ஊகிக்கும்படியே இருந்த காரணத்தாலும், வசன நெடிகளில் தமிழ் அந்நியப்பட்டு போனதாலும் இந்த விமானம் நம்மை கவரவில்லை
மார்க் 2.5/5