விஜயகாந்த்.. தூ – விவகாரம்! போலீஸ் ஆக்சன் எடுக்க ஹைகோர்ட் ஆர்டர்
போன டிசம்பர் மாதம் 27-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜயகாந்த் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்தப்படி நிருபர்களை நோக்கி த்தூ என்று துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியது, இதனால் செய்தியாளர்களை மட்டுமின்றி ஒட்டு மொத்த ஊடகங்களையும் இழி வாகப் பேசியதாக கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் சூடுபிடிக்கவே பத்திரிகையாளர் தேவராஜன் என்பவர் கமிஷனர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பினார். இதோடு நிற்காமல், டிசம்பர் 28-ம் தேதியன்று இணையம் மூலமாக புகார் பதிவு செய்து அதன் நகலை காவல்துறைக்கும் அனுப்பினார். ஆனால் இதுவரை போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து சென்னை ஹைகோர்ட்டில் தேவராஜன் ஒரு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் விஜயகாந்த் மீது போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு குறித்த விசாரணையில் நீதிபதி ஆர்.சுப்பையா கூறும்போது, “சட்டப்படி நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவே தெரிகிறது. எனவே போலீஸ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு பதிவு செய்ய போதுமான முகாந்திரம் இல்லையெனில் இது குறித்தும் புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்


