வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பப் பெண்களுக்கு, 1.5 கோடி ‘காஸ்’ இணைப்புகள்

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பப் பெண்களுக்கு, 1.5 கோடி ‘காஸ்’ இணைப்புகள்

நடப்பு 2016 – 17ம் நிதியாண்டில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, 1.5 கோடி ‘காஸ்’ இணைப்புகள் வழங்கப்படும்,” என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
lpg apr 8
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியின் போது, “நடப்பு, 2016 -17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ‘வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு, 1,600 ரூபாய் நிதி உதவியுடன், சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 1.5 கோடி பேருக்கு, இந்த இணைப்பு வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐந்து கோடி பெண்களுக்கு, காஸ் இணைப்பு வழங்கப்படும்.

‘சந்தை விலையில் சமையல் காஸ் வாங்கும் சக்தியுடையவர்கள் காஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி, வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று 96 லட்சம் பேர், மானி யத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் தொகை, வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்க பயன்படுத்தப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில், 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் கலந் தாலோசித்து, பயனாளிகள் அடையாளம் காணப்படுவர். இது, பெண்களுக்கு ஆரோக்கிய ரீதியாக பயனளிப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வழங்கும். நாட்டில், விறகு அடுப்பு புகையால், நுரையீரல் புற்று நோய், இதய நோய்களால் பாதிக்கப்பட்டு, ஐந்து லட்சம் பெண்கள் வரை இறந்துள்ளனர் என, உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts

error: Content is protected !!